சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலைத்தாக்கம் : ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சி.!

Published By: Robert

09 Jun, 2016 | 10:16 AM
image

சர்­வ­தேச சந்­தையில் பொருட்­களின் விலை குறை­வ­டைந்­த­மை­யினால் கடந்த பெப்­ர­வரி மாதத்தில் ஏற்­று­மதி வரு­மானம் 888 மில்­லியன் டொல­ராக கடந்த வரு­டத்தில்குறித்த காலப்­ப­கு­தி­யுடன் ஒப்­பி­டு­கையில் 1.7 சத­வீ­தத்தால் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது.

இவ் வீழ்ச்­சிக்குமசகெண்ணெய் ஏற்­று­மதி பிர­தான கார­ணியாக இருந்­த­துடன் தங்கம் வைரம் மற்றும் மாணிக்கம் என்­பனவும் பங்­க­ளிப்பு வழங்­கின.கப்பல் மற்றும் விமா­னங்­க­ளுக்கு மச­கெண்ணெய் விநி­யோக வீழ்ச்சி மற்றும் பொது­வான ஏற்­று­மதி விலைவீழ்ச்சி என்­ப­வற்றின் காரண­மாக கடந்த பெப்­ர­வரி மாதத்தில் மச­கெண்ணெய் உற் பத்தி ஏற்­று­ம­தி­யா­னது கடந்த வருடத்தின் இதே காலப்­ப­கு­தி­யுடன் ஒப்­பி­டு­கையில் 55.6 சத­வீத வீழ்ச்­சி­யினை பதிவு செய்­துள்­ளது.

அதே போல் மாணிக்கம், வைரம் மற்றும் தங்­க­ நகை ஏற்­று­மதி வரு­மா­னமும் 33.2 சத­வீதத்தால் வீழ்ச்­சி­ய­டைந்துள் ­ள­துடன் பல சரக்குபொருட்கள் ஏற்­று­மதி வரு­மா­னமும் 34.8 சத­வீ­தத்தால் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது.

அத்­துடன் சர்­வதேச் சந்தையில் ஏற்­பட்ட குறைந்த கேள்வி மற்றும் விலையில் ஏற்­பட்ட வீழ்ச்சி என்­ப­வற்றின் கார­ண­மாக தேயிலை மற்றும் இறப்பர் ஏற்­றும­தி­ வ­ரு­மா­னமும் இக்­கா­லப்­ப­கு­தியில் வீழ்ச்­சியை பதிவு செய்து பெப்­ர­வரி மாதத்தில் ஏற்­று­மதி வரு­மான வீழ்ச்­சிக்கு பெரும் பங்­கினை வகித்துள்­ளது. அந்த வகையில் பெப்ர வரிமாத்தில் தேயிலை 6.8 சத­வீத வீழ்ச்­சி­யையும் இறப்பர் 10.7 சத­வீத வீழ்ச்­சி­யையும் பதிவு செய்துள்­ளது.

இதே வேளை மொத்த ஏற்­றும­தியில் 52 சத­வீத பங்­க­ளிப்பை வழங்கும் ஆடை ஏற்­று­மதி இக்­கா­லப்­ப­கு­தியில் 10.3 சத­வீத வளர்ச்­சி­யினை பதிவு செய்துள்ள­துடன் இது முழு ஏற்­று­மதியில் ஏற்பட்ட வீழ்­சியைகட்­டுப்­படுத்த துணை­பு­ரிந்­தது. இக்காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கான ஆடை ஏற்றுமதியில் முறையே 11.7 சதவீத மற்றும் 8.7 சத வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை கடந்த பெப்ர­வரி மாதத்தில் இறக்­கு­மதிசெலவு 1,439 மில்லியன் அமெ­ரிக்க டொலராக 5.9சத­வீ­தத்தால் வீழ்ச்­சி­ய டைந்­துள்ளது. இவ் வீழ்ச்­சிக்கு பிர­தான கார­ண­மாக மச­கெண்ணெய் விலையில் ஏற்­பட்ட விலை வீழ்ச்சி கார­ண­மாக அமைந்­தது. அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்­வரி மாதத்தில் 69.2டொல­ராக இருந்தஒரு பெரல் மச­கெண்­ணெயின் விலைகடந்த பெப்­ர­வரி மாதத்தில் 35.6 டொல ராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57