வாகன விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு வேலைத்திட்டம்

Published By: J.G.Stephan

19 Jan, 2020 | 10:35 AM
image

(செ.தேன்­மொழி)

வாகன விபத்­து­க­ளினால் ஏற்­படும் பாதிப்­பு­களை கட்­டுப்­ப­டுத்தும் வகையில் வைத்­திய சங்கம், லொத்தர்  சபை, லயன்ஸ் கிளப் மற்றும் போக்­கு­வ­ரத்து பொலிஸ் பிரி­வினர் இணைந்து விசேட விழிப்­பு­ணர்வு வேலைத்­திட்­ட­மொன்றை ஆரம்­பித்­துள்­ளனர். 

இதன் ஆரம்­பக்­கட்ட நிகழ்­வுகள் நேற்று சனிக்­கி­ழமை வைத்­திய சங்­கத்தின் கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றன.

இதன்­போது சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்­ரோ­ஹண, வைத்­தியர் இந்­திக்க கரு­ணா­ரத்ன, பேரா­சி­ரியர் சமன் தர்­ம­ரத்ன, விசேட வைத்­திய நிபுணர் சஞ்­சீவ குரு­சிங்க மற்றும் கார் பந்­தய வீரர் திலந்த மார­க­முவ உள்­ளிட்ட பலரும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

இதன்­போது சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறி­ய­தா­வது,

பொது வாக­னங்கள் போட்டிப் போட்டு செல்­கின்­ற­மை­யினால் பொது­வா­க­னங்­க­ளினால் ஏற்­படும் விபத்­துகள் அதி­க­மா­கி­யுள்­ளன. தெற்­கா­சிய நாடு­க­ளிலே எமது நாட்டில் தான் பொது வாக­னங்கள் போட்­டிப்­போட்டு செல்­கின்­றன. இந்­நி­லையில் வாகன விபத்தை கட்­டுப்­ப­டுத்த வேண்டும் என்றால் அது தனிப்­பட்ட நப­ரொ­ரு­வ­ராலோ அல்­லது குறிப்­பிட்ட சில­ராலோ  முடி­யாது. அனை­வரும் அது தொடர்பில் சிந்­திக்க வேண்டும். இந்­நாட்டை பொறுத்­த­மட்டில் மோட்டார் சைக்கிள் விபத்­து­களே பெரு­ம­ளவில் இடம்­பெற்­றுள்­ளன. ஆபத்­துக்கள் எந்த வடிவில் வரும் என்­பதை எம்மால் அறிய முடி­யாது. அதனால் எப்­போ­துமே நாம் அவ­தா­ன­மாக செயற்­பட வேண்டும். இலங்­கையில் நாளொன்றில் 2 மணித்­தி­யாலம் 49 நிமி­டத்­துக்குள் ஒருவர் வாகன விபத்தில் இறக்­கின்றார். 

இந்த விபத்­துகள் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­படும் விசா­ர­ணை­க­ளுக்­காக அர­சாங்­கத்­தி­லி­ருந்து 30 இலட்சம் ரூபா வரை பணம் செல­வி­டப்­ப­டு­கின்­றது. இதனால் எமது பொரு­ளா­தா­ரத்­துக்கே பெரிதும் பாதிப்பு ஏற்­ப­டு­கின்­றது.

மது­பானம் அருந்தி போதைப்­பொருட்­களை பயன்­ப­டுத்­தி­விட்டு வாக­னங்­களை செலுத்­து­ப­வர்­க­ளாலே விபத்­துகள் அதிகம் ஏற்படுகின்றன. கடந்த வருடம் மாத்­திரம் மது­போ­தையில் வாகனம் செலுத்­தி­ய­தாக ஒரு இலட்­சத்­துக்கும் அதி­க­மான சார­திகள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். 

  மேலும், கடந்த வருடம் மாத்­திரம் வாகன விபத்­து­களால் 30 ஆயிரம் பேர் வரை உயி­ரி­ழந்­துள்­ளனர் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31