19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ; கனடாவை 8 விக்கெட்களால் வெற்றிகொண்டது ஐக்கிய அரபு இராச்சியம்

Published By: Priyatharshan

19 Jan, 2020 | 06:47 AM
image

(நெவில் அன்தனி)

புளூம்பொன்டெய்ன் விளையாட்டரங்கில் இரண்டு அணிளாலும் கணிசமான மொத்த ஓட்டங்கள் குவிக்கப்பட்ட டி குழுவுக்கான 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கனடாவை 8 விக்கெட்களால் ஐக்கிய அரபு இராச்சியம் இலகுவாக வெற்றிகொண்டது.

ஜொநதன் பிகி ஜோன் குவித்த அபார சதம், அணித் தலைவர் ஆரியன் லக்ரா பெற்ற அரைச் சதம் ஆகியன ஐக்கிய அரபு இராச்சியத்தை இலகுவாக வெற்றிபெற வைத்தது. இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டில் 149 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ஐக்கிய அரபு இராச்சிய அணியில் இலங்கையரான 17 வயதுடைய தேஷான் சேத்திய ஆரம்ப வேகபந்துவீச்சாளராக இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகம். இவர் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 231 ஓட்டங்களைக் குவித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 38.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 232 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் திறமையான துடுப்பாட்டங்களின் உதவியுடன் பலமான நிலையை நோக்கி கனடா நகரும் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது.

மத்திய வரிசையில் மொஹமத் கமால், அணித் தலைவர் ஏஷ்டன் டியோசமி ஆகியோர் ஓரளவு பிரகாசித்தனர்.

ஆனால், ஏனையவர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காததால் கனடா 231 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.

232 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு கடினமான போதிலும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் முன்வரிசை வீரர்கள் நால்வரும் திறமையாக துடுப்பெடுத்தாடி தமது அணியின் வெற்றியை இலகுவாக்கினர்.

பிகி ஜோன் 101 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்ட்றிகள், ஒரு சிக்சருடன் ஆட்டமிழக்காமல் 102 ஒட்டங்களைக் குவித்ததன் மூலம் ஆட்டநாயகன் விருதை வென்றெடுத்தார்.

ஓட்ட எண்ணிக்கை சுருக்கம்

கனடா 50 ஓவர்களில் 231 - 8 விக். (மிஹிர் பட்டேல் 90, ரந்திர் சாந்து 35, மொஹமத் கமால் 31, அக்கில் குமார் 30, ஏஷ்டன் டியோசமி 23, சச்சதித் ஷர்மா 42 - 3 விக்., ஆரியன் லக்ரா 39 - 2 விக்., தேஷான் சேத்திய 52 - 2 விக்.)

ஐக்கிய அரபு இராச்சியம் 38.4 ஓவர்களில் 232 - 2 விக். (ஜொநதன் பிகி ஜோன் 102 ஆ.இ., ஆரியன் லக்ரா 66, அன்ஷ் டெண்டன் 28 ஆ.இ., விரித்தியா அரவிந்த் 21, மொஹமத் கமால் 27 - 1 விக்., டியோசமி 42 - 1 விக். 

கனடா, கிரிக்கெட், ஐக்கிய அரபு இராச்சியம், 19 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41