ஒவ்வொரு காட்சியிலும் நீயே எனது நட்சத்திரம் - மனைவிக்கு ஒபாமா பிறந்த நாள் வாழ்த்து

18 Jan, 2020 | 11:30 AM
image

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபமா தனது மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து நேற்று வெளியிட்ட டுவிட்டர் செய்தி நேற்யை தினம் பலரின் மனதை ஈர்த்த டுவிட்டர்செய்தியாக மாறியுள்ளது.

மிச்செல் ஒபாமாவின் 56 வது பிறந்த நாளை முன்னிட்டு டுவிட்டரில் வாழ்த்தினை பதிவு செய்துள்ள ஒபாமா ஒவ்வொரு காட்சியிலும் நீயே எனது நட்சத்திரம் என்ற வரிகளை பதிவு செய்துள்ளார்.

மேலும் பராக் ஒபாமா தானும் மனைவியும் காணப்படும் கறுப்பு வெள்ளை புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார்.

பராக் ஒபாமாவின் இந்த டுவிட்டர்செய்தியை ஒரு மணிநேரத்தில் 400,000 பேர் விரும்பியுள்ளனர்.

இதேவேளை சட்டத்தரணியும் எழுத்தாளரும் முன்னாள் முதல்பெண்மணியுமான  மிச்சல் லாவோன் ரொபின்சன் ஒபாமாவிற்கு டுவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்துக்களை  தெரிவித்துள்ள பலர் இருவரையும் முன்னுதாரணமான தம்பதியினர் என வர்ணித்துள்ளனர்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மிச்செல் ஒபாமா என வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ஒருவர் ஆச்சரியமளிக்கும் தம்பதியினர் என புகழ்ந்துள்ளார்.

பராக்கும் மிச்செலும் அனைத்து தம்பதியினரினதும் இலக்கு என ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஒபாமாவின் பதவிக்காலத்தில் மிச்செல் ஒபாமா ஆற்றிய பல உரைகள் அமெரிக்கர்களை மாத்திரமின்றி உலக நாடுகளை சேர்ந்த பலரை கவர்ந்துள்ளன.

உண்மையான தலைமைத்துவம் என்பது அனேகமான தருணங்களில் எதிர்பாராத நபர்கள், எதிர்பாராத இடங்களில் மேற்கொள்ளும் சிறிய நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுகின்றது என 2011 யூன்மாதம் மிச்செல் ஒபாமா வெளியிட்ட கருத்து அவரின் மிக முக்கியமான பலரும் பயன்படுத்தும் மேற்கோளாக காணப்படுகின்றது.

2016 இல் மிச்செல் ஒபாமா தனது இரு புதல்விகளிற்கும் தெரிவித்த செய்தி உலகிற்கான செய்தியாக மாறியது.

ஒருவர் ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அல்லது வலிந்து மோதலிற்கு இழுக்கும்போது,நீங்கள் அவரின் அளவிற்கு தரம் தாழ்ந்து போகக்கூடாது,அவர்கள் தரம் தாழ்ந்து போகும்போது நீங்கள் தரஉயரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என மிச்செல் ஒபாமா ஜனநாயக கட்சியின் மாநாடொன்றில் தெரிவித்திருந்தார்.

தற்போது முதல் பெண்மணியாக காணப்படாத போதிலும் இன்னமும் அவரிற்கான மக்கள் செல்வாக்கு அதிகமாக காணப்படுகின்றது.

அமெரிக்காவில் அதிகளவு நேசிக்கப்படும் பெண்ணாக இரண்டு வருடங்களாக அவர்தொடர்ச்சியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right