இன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - ஜனவரி 18

Published By: Digital Desk 3

18 Jan, 2020 | 09:31 AM
image

இன்றைய தின நிகழ்வுகள்:

350 – மக்னென்டியசு ரோமப் பேரரசன் கொன்ஸ்டன்சை அகற்றி தன்னை மன்னனாக அறிவித்தான்.

474 – ஏழு வயது இரண்டாம் லியோ பைசாந்தியப் பேரரசனாக முடி சூடினான். ஆனாலும், இவன் பத்து மாதங்களில் உயிரிழந்தான்.

1486 – இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றி யோர்க் இளவரசி எலிசபெத்தைத் திருமணம் செய்தார்.

1535 – எசுப்பானிய வெற்றி வீரர் பிரான்சிஸ்கோ பிசாரோ பெருவின் தலைநகர் லிமாவை நிர்மாணித்தார்.

1591 – சியாம் மன்னர் நரேசுவான் பர்மா இளவரசர் மின்சிட் சிராவுடன் தனியாக மோதி அவனைக் கொன்றார். இந்நாள் இன்றும் தாய்லாந்தில் அரச தாய் படைத்துறைகள் நாள் எனக் கொண்டாடப்படுகிறது.

1701 – புருசியாவின் மன்னாராக முதலாம் பிரடரிக் முடி சூடினார்.

1778 – ஹவாய் தீவுகளைக் கண்டறிந்த முதலாவது ஐரோப்பியர் கெப்டன் ஜேம்ஸ் குக் இதற்கு "சான்ட்விச் தீவுகள்" எனப் பெயரிட்டார்.

1788 – இங்கிலாந்தில் இருந்து 736 கைதிகளைக் கொண்ட முதலாவது தொகுதி அவுஸ்திரேலியாவின் பொட்டனி விரிகுடாவைச் சென்றடைந்தது.

1806 – இடச்சு கேப் குடியேற்றம் பிரித்தானியாவிடம் சரணடைந்தது.

1824 – பிரித்தானிய இலங்கையின் ஆளுநராக சேர் எட்வர்ட் பார்ன்ஸ் நியமிக்கப்பட்டார்.[1]

1871 – வடக்கு ஜேர்மனி கூட்டமைப்பு மற்றும் தெற்கு ஜேர்மன் மாநிலங்கள் ஆகியன ஜேர்மன் பேரரசு என்ற பெயரில் இணைந்தன. முதலாம் வில்லெம் அதன் முதலாவது மன்னனான்.

1896 – எக்ஸ்றே இயந்திரம் முதற் தடவையாக எச். எல். சிமித் என்பவரால் காட்சிப்படுத்தப்பட்டது.

1911 – யூஜின் எலி என்பவர் தனது விமானத்தை சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பென்சில்வானியா என்ற கப்பலின் மீது இறக்கினார். கப்பலொன்றில் தரையிறக்கப்பட்ட முதலாவது விமானம் இதுவாகும்.

1919 – முதலாம் உலகப் போர்: பாரிஸ் அமைதி உச்சி மாநாடு பிரான்ஸ், வேர்சாயில் ஆரம்பமானது.

1929 – லியோன் திரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் இத்தாலியக் கிழக்கு ஆப்பிரிக்காவில் போரைத் தொடங்கியது.

1944 – இரண்டாம் உலகப் போர்: மூன்று ஆண்டுகளாக நாசிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த லெனின்கிராட் நகரை சோவியத் படைகள் மீட்டெடுத்தன.

1945 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் கிராக்கோவ் நகரம் செஞ்சேனையினால் விடுவிக்கப்பட்டது.

1960 – அமெரிக்காவில் வர்ஜீனியா மாநிலத்தில், வானூர்தி ஒன்று வயல் நிலமொன்றில் வீழ்ந்ததில் அதில் யனம் செய்த 50 பேரும் உயிரிழந்தனர்.

1960 – கொங்கோவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய வட்டமேசை மாநாடு பெல்ஜியத்தில் நடைபெற்றது.

1969 – அமெரிக்க விமானம் ஒன்று சாண்டா மொனிக்கா விரிகுடாவில் வீழ்ந்ததில் 38 பேர் கொல்லப்பட்டனர்.

1974 – இஸ்ரேலுக்கும், எகிப்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதை அடுத்து யோம் கிப்பூர்ப் போர் முடிவுக்கு வந்தது.

1976 – லெபனான் கிறித்தவர்களின் குடிப்படைகள் பெய்ரூட் கரந்தீனாவில் குறைந்தது 1,000 பேரைக் கொன்றனர்.

1977 – பொசுனியா எர்செகோவினாவில் யுகோசுலாவியாவின் பிரதமர் ஜெமால் பிஜேதிச், அவரது மனைவி, மற்றும் ஆறு பேர் விமான விபத்தில் உயிரிழந்தனர்.

1977 – அவுஸ்திரேலியாவின் சிட்னியின் புறநகர்ப் பகுதியான கிரான்வில் என்ற இடத்தில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதன் மேல் சென்று கொண்டிருந்த தொடருந்து கீழே வீழ்ந்ததில் 83 பேர் உயிரிழந்தனர்.

1993 – அமெரிக்காவின் அனைத்து 50 மாநிலங்களிலும் மார்ட்டின் லூதர் கிங் நாள் அதிகாரபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.

1995 – 17,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் தெற்கு பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டன.

1997 – போர்ஜ் அவுஸ்லாண்ட் என்பவர் அண்டார்க்டிக்காவை துணை எதுவுமின்றி முதன் முதலில் கடந்து சாதனை படைத்தார்.

2002 – சியேரா லியோனியில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

2003 – அவுஸ்திரேலியா தலைநகர் கன்பராவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் 4 பேர் கொல்லப்பட்டு 500 வீடுகள் முற்றாக எரிந்து சேதமடைந்தன.

2005 – உலகின் மிகப்பெரும் ஜெட் வானூர்தி ஏர்பஸ் ஏ380 பிரான்சின் துலூசில் அறிமுகப்படுத்தப்பட்டது.

2007 – மேற்கு ஐரோப்பாவின் 20 நாடுகளில் தாக்கிய கிரில் சூறாவளியினால் ஐக்கிய இராச்சியத்தில் 14 பேர், மற்றும் செருமனியில் 13 பேருமாக மொத்தம் 44 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்:

1752 – ஜான் நாசு, பிரித்தானியக் கட்டிடக் கலைஞர் (இ. 1835)

1854 – குமாரசாமிப் புலவர், ஈழத்துப் புலவர் (இ. 1922)

1892 – ஒலிவர் ஹார்டி, அமெரிக்க நகைச்சுவை நடிகர் (இ. 1957)

1921 – நாம்பு ஓச்சிரோ, நோபல் பரிசு பெற்ற சப்பானிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2015)

1927 – எஸ். பாலச்சந்தர், தமிழக நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், வீணை இசைக்கலைஞர் (இ. 1990)

1936 – ஜோன் ரூட், கென்ய சுற்றுச்சூழல் ஆர்வலர், திரைப்படத் தயாரிப்பாளர் (இ. 2006)

1952 – வீரப்பன், தமிழக சந்தனக் கடத்தல்காரர் (இ. 2004)

1955 – கெவின் கோஸ்ட்னர், அமெரிக்க நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்

1955 – எரிக் சொல்ஹெய்ம், நோர்வே அரசியல்வாதி

1969 – டேவ் பாடிஸ்டா, அமெரிக்க மற்போர் வீரர், நடிகர்

1971 – அமி பர்கர், அமெரிக்க வானியலாளர்

1971 – பெப் கார்டியோலா, எசுப்பானியக் கால்பந்து வீரர்

1971 – பின்யாவாங்கா வையினையினா, கென்ய எழுத்தாளர், ஊடகவியலாளர்

1972 – வினோத் காம்ப்ளி, இந்தியத் துடுப்பாளர்

1980 – ஜேசன் செகெல், அமெரிக்க நடிகர்

இன்றைய தின இறப்புகள்:

1862 – ஜான் டைலர், அமெரிக்காவின் 10 ஆவது அரசுத்தலைவர் (பி. 1790)

1917 – அன்ட்ரூ மறீ, தென்னாப்பிரிக்க எழுத்தாளர், மற்றும் கிறித்துவப் பாதிரியார் (பி. 1828)

1936 – இரட்யார்ட் கிப்ளிங், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1865)

1936 – ஜான் வுட்ரோப், பிரித்தானிய கீழ்த்திசைவாதி (பி. 1865)

1955 – சாதத் ஹசன் மண்ட்டோ, பாக்கித்தானிய எழுத்தாளர் (பி. 1912)

1982 – உவாங் சியான்பான், சீன வரலாற்றாளர், மானிடவியலாளர் (பி. 1899)

1995 – அடால்ஃப் புடேனண்ட், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (பி. 1903)

1996 – என். டி. ராமராவ், தென்னிந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், ஆந்திராவின் 10வது முதலமைச்சர் (பி. 1923)

2003 – ஹரிவன்சராய் பச்சன், இந்தியக் கவிஞர், நூலாசிரியர் (பி. 1907)

2005 – எஸ். எம். கார்மேகம், இலங்கை மலையக எழுத்தாளர் (பி. 1939)

2006 – வை. சச்சிதானந்தசிவம், ஈழத்து ஓவியர், எழுத்தாளர், குறும்பட இயக்குனர், எழுத்தாளர் (பி. 1940)

2016 – தி. ச. சின்னத்துரை, சிங்கப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி (பி. 1930)

2018 – காசிநாத், தென்னிந்திய கன்னட நடிகர், இயக்குநர் (பி. 1951)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04