போரால் பாதிக்கப்பட்டோரின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்கள் – இராஜாங்க அமைச்சர் உறுதி

Published By: Daya

18 Jan, 2020 | 09:30 AM
image

“காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள், முன்னாள் போராளிகள், மீள்குடியமர்த்தப்பட்டோர் மற்றும் சிறப்புத் தேவையுடையோரின் குடும்பங்கள் சமுர்த்தித் திட்டத்துக்குள் இணைத்துக் கொள்ளப்படுவதுடன் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்கள் கொண்டுவரப்படும்” என்று இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த உறுதிமொழியை அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சமுர்த்தி தைப்பொங்கல் விழா ஆவரங்கால் சமுர்த்தி வங்கி வளாகத்தில் நேற்று இடம்பெற்றது. 

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் பங்கேற்றார்.

சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், யாழ்ப்பாணம் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், கிளிநொச்சி சமுர்த்தி பணிப்பாளர், பிரதேச செயலகங்கள், சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள், அரச உத்தியோகஸ்தர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஆவரங்கால் சமுர்த்தி வங்கியில் பொங்கல் விழாவோடு ஆரம்பமாகித் தொடர்ந்தும் பயனாளிகளுக்குக் கடன் வழங்கும் நிகழ்வும், கொடுக்கல் வாங்கல் நிகழ்வும் விருந்தினர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதை அடுத்து விருந்தினர்களுக்குப் பொங்கல் பரிமாறப்பட்டு யாழ்ப்பாணத்தின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது. தேசிய கலாசார விழா பாரம்பரிய கலைநிகழ்வுகளுடன் நடந்தேறியது.

யாழ்ப்பாணம் மாவட்டம் வறுமையில் 8 ஆவது மாவட்டமாகக் காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள முயற்சியாளர்களையும் உற்பத்தியாளர்களையும் ஊக்கிவிப்பதற்கு சிறந்த சந்தை வாய்ப்பையும் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி முன்னேற்றப்படவேண்டும்.

ஜனாதிபதியால் தற்போது வழங்கப்பட இருக்கும் ஒரு இலட்சம் வேலை வேலைவாய்ப்புகள் சமுர்த்தி பயனாளிகளுக்கும் சமுர்த்தி பெறுவதற்குத் தகுதி உடையவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.

முன்னாள் போராளிகள், போரினால் காணாமற்போனோரின் குடும்பங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், சிறப்புத் தேவையுடையோரை சமுர்த்தி பயனாளிகளாக்கவும் மற்றும் புதிய சமுர்த்தி வேலைத்திட்டங்களைச் செயற்படுத்துமாறும் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கின்றேன்” என்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

“யாழ்ப்பாண முயற்சியாளர்களுக்குச் சந்தைவாய்ப்புக்கள் தேசிய ரீதியில் மட்டுமல்ல சர்வதேச ரீதியில் ஏற்படுத்தப்படும். யாழ்ப்பாணம் பனை உற்பத்தி பொருள்களை இணையத்தின்  மூலம் சந்தைப்படுத்த ஊக்கிவிக்கப்படும்.

சமுர்த்தி திட்டம் ஊடாக நாடுமுழுவதும் வறுமை ஒழிப்பு நடைமுறைப்படுத்தப்படும்.

பாராளுமன்ற  உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர்கள், முன்னாள் போராளிகள், மீள்குடியேற்றப்பட்டவர்கள் என்போரின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது என் தலையாய கடமையாகும். இப்பொறுப்பை செவ்வனவே செய்வேன்” என்று இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19