இரா­ணுவம், விசேட அதி­ரடிப் படையை அழைக்க நட­வ­டிக்கை: இரா­ணுவம், விசேட அதி­ரடிப் படையை அழைக்க நட­வ­டிக்கை

Published By: Daya

17 Jan, 2020 | 12:57 PM
image

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் பெரு­கி­வரும்  போதைப்பொருள் பாவனை மற்றும் வியா­பா­ரத்தைக் கட்­டுப்­ப­டுத்த இரா­ணு­வத்­தையும் விசேட அதி­ர­டிப்­ப­டை­யையும் அழைக்க தீர்­மா­னித்­துள்­ள­தாக சப்­ர­க­முவ மாகாண ஆளுநர் டிக்­கிரி கொப்பே கடுவ தெரி­வித்தார்.

சப்­ர­க­முவ மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற போதைப்­பொருள்  அவ­தானம் குறித்த கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

 நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் பங்­கா­ளி­யான நாம் இனியும் இவ்­வி­ட­யத்தில் பொறு­மை­யாக இருக்க முடி­யாது. சமூ­கத்தை துண்­டாடும் இந்தப் போதையை நாட்­டி­லி­ருந்து அழித்தொழிக்க வேண்டும். சம்­பி­ர­தாய,பாரம்பரிய சட்டதிட்­டங்கள் அணுகுமுறைகள் இதனைக் கட்­டுப் ­ப­டுத்தப் போதுமானவை­யாக இல்லை என்­பதை நாம் உணர்­கிறோம்.  பொலி­ஸா­ரால் மாத்­திரம் இதனைக் கட்­டுப்­ப­டுத்­தவும் முடி­யாது.  

எனவே இரத்­தி­ன­புரி மாவட்­டத்­தி­லிருந்து இந்தப் போதையை விரட்­டி­ய­டிக்கத் துணி­க­ர­மான நட­வடிக்கைக­ளுக்குள் நாமும் நுழைய வேண்டும். எனவே இப்­ப­ணிக்­காக இரா­ணுவத்தையும் விசேட அதி­ரடிப்படை­யையும் பயன்­ப­டுத்த தீர்­மா­னித்­துள்ளேன்.

இன்று உற­வுகள்,  சமூ­கங்கள் பிரிந்து வாழ்­வ­தற்கும்  சமூக சீர்­கு­லை­வுக்கும்  இந்தப் போதை பிர­தான பங்­காற்­று­கி­றது. போதை வியாபா­ரி­களின் பிர­தான இலக்­காக இன்று பாட­சாலை மாண­வர்­களும் இளைஞர்களும் காணப்­ப­டு­கின்­றனர். குறிப்பாக தனியார் வகுப்­பு­க­ளுக்குச் செல்லும் இளை­ஞர்கள் மீதே போதை வியா­பாரிகளின் அதிக கவனம் திரும்­பி­யுள்­ளது.  இவர்கள் மூலம் போதை  வியா­பா­ரத்­தை விருத்தி செய்யும் தந்­தி­ரோ­பா­யத்­தையே இவர்கள் கையா­ளு­கின்­றனர்.

எனவே பெற்­றோர் இவ்­வி­ட­யத்தில் அதிக அவ­தானம் செலுத்த வேண்டும். இவ்விடயத்தில் எமக்கு கட­மை­யோடு மட்டும் ஒதுங்கி விட முடி­யாது.  போதை இன்று முழு நாட்­டையும் ஆட்டிப் படைக்­கி­றது.  போதையை அடி­யோடு ஒழிப்­பதில் எமக்குப் பாரிய பொறுப்பும் உள்ளது என்பதை உணர வேண்டும். எனவே எதிர் கால சந்ததியை படுகுழியில் தள்ளும் இந்தப் போதையை ஒழிக்க எந்த அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயங்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித் தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31