கூட்டு ஒப்­பந்தம் எதற்கு ? கூட்டு ஒப்­பந்தம் வெறும் நாடகம் தானா? என திலகராஜ் எம்.பி. கேள்வி

Published By: Daya

17 Jan, 2020 | 10:43 AM
image

(ஆர்.யசி)

இவ்­வ­ளவு காலம் கூட்டு ஒப்­பந்தம் மூலம்தான் தீர்வு காணலாம் எனக் கூறி அதற்­காகப் பல சுற்றுப் பேச்­சு­வார்த்­தைகள் நடாத்­திய  அதே தொழிற்­சங்க அர­சியல்  தலை­வர்­கள்தான் இன்று அந்த ஒப்­பந்தம் பற்­றிய எந்தப் பேச்­சுக்­களும் இல்­லாமல் அர­சாங்­கத்தின்   ஊடாக சம்­பள அதி­க­ரிப்பை வழங்கப் போவ­தாக தெரி­விக்­கி­றார்கள். அப்­போது இத்­தனை கால கூட்டு ஒப்­பந்தம் வெறும் நாடகம் தானா? இந்த அறி­விப்புத் தொடர்பில் கம்­ப­னி­க­ளி­னதும் நிலைப்­பாட்­டையும் அறி­ய­வேண்­டி­யுள்­ளது என தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியின் நுவ­ரெ­லியா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.தில­கராஜ் தெரி­வித்தார்.

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா குறைந்­த­பட்ச வேதனம் எதிர்­வரும் மார்ச் மாதம் முதல் வழங்­க­வுள்­ள­தாக விடுத்­துள்ள அறி­விப்பு தொடர்பில் அவ­ரிடம் கருத்து கேட்ட போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரி­விக்­கையில், 

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம்  ரூபா சம்­பளம் அதி­க­ரிப்பு கிடைத்தால் அது வர­வேற்கக் கூடி­யதே. முறைப்­படி 2015 மார்ச்சில்  செய்­தி­ருக்க வேண்­டிய கூட்டு ஒப்­பந்தம் 2016 ஒக்­டோ­ப­ரி­லேயே செய்­யப்­பட்­டது. அங்கு 19 மாதங்கள் சம்­பள அதி­க­ரிப்பு வழங்­கப்­பட்­டிருக் கவில்லை. அதன்­பி­றகு 2018 செப்­டெம்பர்  செய்­தி­ருக்க வேண்­டிய ஒப்­பந்தம் 2019 டிசம்­ப­ரி­லேயே செய்­யப்­பட்­டது. எனவே ஏறக்­கு­றைய இரண்டு வரு­டங்கள் தோட்­டத்­தொழி லாளர்­க­ளுக்கு சம்­பள அதி­க­ரிப்பும் வழங்­கப்­ப­ட­வில்லை. அதற்­கான நிலுவைக் கொடுப்­ப­னவும் வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. எனவே இப்­போ­தைய 750/= வில் இருந்து ஆயிரம்  ரூபா அதி­க­ரிப்பு சாதா­ர­ண­மாக கிடைத்­தி­ருக்க வேண்­டி­யதே. 

கடந்த 2018 சம்­பள பேச்­சு­வார்த்­தை­க­ளின்­போது மொத்த சம்­ப­ள­மாக 950/= ஐ வழங்க கம்­ப­னிகள் சம்­ம­தித்து இருந்­தன. நல்­லாட்சி அர­சாங்கம் 50/= வழங்க அத்­தனை ஏற்­பா­டு­களும் செய்து அதற்­கான நிதியும் ஒதுக்­கீடு செய்த நிலை­யி­லேயே இருந்­தது. எனவே இந்த இரண்­டையும் சேர்த்­துத்தான் 1000/= என அறி­விக்­கி­றார்­களோ தெரி­ய­வில்லை. அப்­படி ஆயின் அது மொத்­த­சம்­ப­ளமே அதற்கு கம்­ப­னிகள் பல நிபந்­த­னை­க­ளையும் விதித்து இருந்­தன.  இப்­போ­தைய அறி­விப்பில் அப்­ப­டி­யான  எந்த விளக்­கமும்  இல்லை. ஆயிரம் ரூபா வழங்­கு­வ­தற்­கான பரி­சீ­லனை அறி­விப்­பா­கவே உள்­ளது. 

 ஆயிரம் ரூபா சம்­பளம் வழங்க அரசு  அறி­வித்­தாலும் அதனை வழங்க வேண்­டிய கம்­ப­னிகள் எந்த அறி­விப்­பையும் விடுக்­க­வில்லை. எனவே இதன் நடை­முறை சாத்­தியம் பற்றி சிந்­திக்க வேண்டி உள்­ளது. 

கடந்த காலங்­களில் கம்­ப­னிகள் இத்­த­கைய அறி­விப்­பு­க­ளின்­போது காட்­டிய எதிர் வினை­களை நாம் மறந்­து­வி­ட­வில்லை. அர­சாங்கம் அறி­விப்­பு­களைச் செய்து நிதி ஒதுக்­கீ­டுகள் செய்த போதும் கூட கம்­ப­னிகள்  பல்­வேறு கார­ணங்­களைக் கூறி மறுத்­தன.

இந்­த­நி­லையில் ஆயிரம் ரூபா அடிப்­படைச் சம்­ப­ளத்தை  அர­சாங்கம் உறு­திப்­ப­டுத்த முடிந்தால்  அர­சாங்­கமே தோட்டத் தொழி­லா­ளர்­களின்  சம்­ப­ளத்தைத் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக இனி திக­ழ­வேண்டும். இடையில் கூட்டு ஒப்­பந்தம் எனும் பேச்சு வார்த்தை நாடகம் அவ­சி­ய­மற்­றது. அதற்­கான உறு­திப்­பாட்­டையும்  அர­சாங்கம் வழங்க  வேண்டும்.

பெருந்­தோட்­டத்­துறை சார்ந்த பிரச்­சினை தனியே ஆயிரம் ரூபா மாத்­தி­ர­மல்ல. அந்தக் கட்­ட­மைப்பில் மலை­யக சமூகம் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டுள்ள நிலைமையில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்த முறைமை மாற்றமே ஒரே தீர்வு . அதுவே எமது இலக்கு. தொழிலாளர்களை சம்பளத் தொகைக்குள் மாத்திரம்  மட்டுப்படுத்தாது அவர்களது அடிமை வாழ்வு முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02