முகாமை ஏன் சாலாவில் அமைத்தோம்? : எமது பக்கம் சிறு தவறு ஏற்பட்டிருக்கலாம்:  வெடிப் பொருட்களை நினைவுச் சின்னமாக எடுத்துச் செல்கின்றனர் :  கொஸ்கம சம்பவம் தொடர்பில் புது தகவல்கள்

Published By: MD.Lucias

08 Jun, 2016 | 07:16 PM
image

கப்பல்கள் மூலம் கொண்டு வரப்பட்ட ஆயுதங்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் களஞ்சியப்படுத்தும் பாதுகாப்பான இடமாக சாலாவ பகுதி காணப்பட்டது. யுத்த காலத்தில் இந்த இடத்தில் முகாமை அமைப்பதற்கு ஏதுவான சகல காரணிகளும் சிறப்பாக காணப்பட்டமையாலே இங்கு முகாமை அமைத்தோம். எனினும் இவ்வாறான ஒரு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்திற்கு இராணுவத்தினரில் பக்கத்தில் சிறு தவறு காணப்படலாம். இதுதொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம் என என்று இராணுவ பேச்சாளர் பிரிகெடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.

இதேவேளை சாலாவ பிரதேச மக்கள் வெடிப்பொருட்களை நினைவுச் சின்னமாக எடுத்து செல்கின்றனர். இதனை யாரும் எடுத்துச் செல்ல கூடாது. மிகவும் ஆபத்தான விடயமாகும். இவ்வாறு எடுத்துச் சென்றவர்கள் உடனடியாக இராணுவத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு தகவல் வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

சாலாவ இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியம்  வெடித்தமை   தொடர்பில் பல மட்டங்களில் விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன.    முப்படையினர்  விசாரணை  குழு ஒன்றை அமைத்துள்ளனர். இராணுவ தளபதியும் இரகசிய பொலிஸாரைக் கொண்டு விசாரணை நடத்துகின்றார்.  சிவில் விசாரணiயும் நடைபெறுகின்றது. 

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றார்

கடந்த ஐந்தாம் திகதி 5.45 மணியளவில்   சாலாவ முகாமில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதும்   இராணுவ தளபதி  உடனடியாக  சம்பவ இடத்துக்கு சென்று  நிலைமையை ஆராய்ந்தார். 

உயிரிழப்புகள் குறைவு

இராணுவம்  கவனமாக செயற்பட்டமையினால் உயிரிழப்புக்கள் குறைவடைந்தன.   ஆனால் உயிரிழப்புக்கள் அதிகமாக இருக்கும் என்று சந்தேகம் வெளியிடப்படுகின்றது. ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.  அவ்வாறு உயிரிழப்புக்கள் இடம்பெற்றிருக்குமாயின்   அதனை மறைக்கவும் முடியாது. முதலில் ஊடகங்களுக்கு செய்தி வந்திருக்கும். 

நினைவுச் சின்னமாக எடுத்து செல்கின்றனர்

  கொஸ்கம பகுதியில் சிதறிக்கிடக்கின்ற ஆயுதங்களை  மக்கள்   நினைவுச் சின்னமாக வைத்துக்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. அவ்வாறு செய்யவேண்டாம். இவை இராணுவத்துக்கு உரிய பொருட்கள்.    இராணுவம் உரிய முறைமைகளை பின்பற்றி  இவற்றை அழிக்கும்.  மேலும் சிதறிக்கிடக்கும் ஆயுதங்கள்  ஒருவேளை வெடிக்கலாம்.  

கேள்வி: மக்கள் குடியிருப்புக்கள் உள்ள இடத்தில் ஏன் ஆயுத களஞ்சியம் அமைக்கவேண்டும்? 

பதில்  கடந்த இரண்டு வருடங்களாக  இதனை மாற்றியமைப்பதற்கு  நடவடிக்கை திட்டமிட்டிருந்தோம்.  யுத்த காலத்தில்  கப்பல்களிலிருந்து ஆயுதங்களை  உடனடியாக களஞ்சியப்படுத்த  இதனை விட சிறந்த இடம் வேறு எங்கும் காணப்படவில்லை.  அதனால்  அதனை அமைத்தோம். மேலும் முகாம் அமைப்பதற்கான சகல விதமான காரணிகளுக்கும் இந்த இடம் பொறுத்தமானதாக இருந்தது. எதிர்வரும் காலங்களில்  மக்கள் குடியிருப்புக்கள் அற்ற பிரதேசங்களில்   முகாம்களை அமைப்போம். 

கேள்வி தற்போதும் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறுகின்றனவா?  

பதில் 

சிறு சிறு  வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. நேற்று மாலையும் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றது. ஆனால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. மேலும் இன்று குறித்தப் பகுதியில் புகை மண்டலம் காணப்பட்டது. எனினும் அங்கு முப்படை உள்ளது.   தேவையான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

கேள்வி ஏன் உளவுப் பிரிவினர் விசாரணை செய்யவில்லை. 

பதில் முப்படையினர் விசாரணை நடத்தும்போது உளவுப் பிரிவும் அதில் உள்ளடங்கும். 

கேள்வி இதுதான் பெரிய ஆயுத களஞ்சியமா? 

பதில் சில விடயங்களை பொது மக்களுக்கு கூறுவது பொருத்தமில்லை. இது பெரிய  ஆயுத களஞ்சியமா? சிறிய ஆயுத கஞ்சியமா? என்று  கூற முடியாது.  அது  தேவையற்ற விடயமாகும்.   சம்பவம்  தொடர்பில் கவலையடைகின்றோம்.  தேவையான  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக இரகியங்கள் இதன் மூலம் வெளியாவதோடு நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்குமு;.

கேள்வி இந்த வெடிப்பு சம்பவத்தால்  இராணுவம் பலவீனம் அடையுமா? 

பதில்  அவ்வாறு  இராணுவத்தினர் எந்தவகையிலும்  தளர்வடையவில்லை.  30 வருட யுத்தததை நாங்கள் முடித்தவர்கள்.  எமக்கு  சிறந்த மன தைரியம் காணப்படுகின்றது. இந்த சம்பவத்தினால் எந்த   சிக்கலும் இல்லை. அத்துடன் இந்த சம்பவத்தினால் தேசிய  பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும்  இல்லை. அவ்வாறு ஏதாவது பிரச்சனை ஏற்படுமென்றால் அரசாங்கம் நிச்சயம் எமக்கு உதவும்.

கேள்வி வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றவேண்டும் என்று  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதே? 

பதில்  வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு  கோரப்பட்டுள்ளது. நானும் அந்த செய்தியை பார்த்தேன்.  இங்கு ஒரு விடயத்தை  முக்கியமாக குறிப்பிடவேண்டும். 

அதாவது இராணுவத்தினர்  மக்களுக்கு சேவையாற்றும்போது  இனம் மதம் பார்ப்பதில்லை.  யார் ஆபத்து சந்தித்துள்ளனரோ  அவர்களை பாதுகாப்பதே எமது பொறுப்பாகும்.    உதாரணமாக  அரநாயக்கவில் அனர்த்தம் ஏற்பட்டபோது கேகாலை மாவட்டத்தில்  இராணுவ முகாம் இருந்ததால்   மீட்பு பணிகளை முன்னெடுத்து மக்களை காப்பாற்றினோம். 

எனவே வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றினால்   அங்கு மக்களுக்கு ஏதாவது இடர் ஏற்பட்டாலோ அல்லது பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டாலோ யார் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது?  மக்களின் பாதுகாப்புக்காகவே நாங்கள் செயற்படுகின்றோம். 

கேள்வி ஆறு வருடங்களில் ஐந்து தடவைகள் ஆயுத களஞ்சியம் வெடித்துள்ளது?  என்ன காரணம்? 

பதில் ( ராஜித்த)    இந்தியாவிலும் இவ்வாறு  அண்மையில் இராணுவ ஆயுத களஞ்சியங்கள் வெடித்துள்ளன. இது எந்த நாட்டிலும் நடக்கும்.   ஆனால்  வெளிநாடுகளில் இவ்வாறு நடக்கும்போது யாரும் அரசாங்கத்தை விமர்சிக்கமாட்டார்கள்.  மாறாக  என்ன நடந்தது என்றே ஆராய்வார்கள். 

கேள்வி இந்த ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு திட்டமிடப்பட்டவையா? 

பதில்  (ராஜித்த) அவ்வாறு அமைச்சரவையில் எதுவும் பேசப்படவில்லை.  

கேள்வி பாதிக்கப்பட்ட வீடுகள் ? 

பதில் அனைத்தையும் அரசாங்கம் பொறுப்பேற்று நடத்தும். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37