பெண் பொலிஸ் வீட்டில் மறைந்திருந்த இரு கொள்ளையர்கள் கைது

Published By: Daya

16 Jan, 2020 | 04:41 PM
image

தெல்லிப்பளையில் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டுக்குள் மறைந்திருந்த கொள்ளைச் சந்தேகநபர்கள் இருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

மானிப்பாய், கோப்பாய் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“சந்தேகநபர்கள் இருவரும் கொள்ளையிட்ட நகைகளை வவுனியாவில் விற்பனை செய்துள்ளமையை அறிந்து மானிப்பாய் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் தெல்லிப்பளையில் உள்ள தமிழ் பெண் உத்தியோகஸ்தரின் வீட்டில் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் குறித்த வீடு இன்று நண்பகல் முற்றுகையிடப்பட்டு சந்தேகநபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

இவ்வாறு கொள்ளையர்கள் இருவரும் மறைந்திருந்த வீட்டில் வசிக்கும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக கடமைக்குச் சமுகமளிக்கவில்லை. அதனால் அவர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர்கள் இருவரும் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01