கொடூ­ர­மான சட்­டங்­களை அமுல்­ப­டுத்தும் “சவூதி அரே­பி­யா­வுக்கு” இலங்­கை­யர்­களை தொழி­லுக்கு அனுப்­பு­வதை தடை செய்ய வேண்டும் என நேற்று சபையில் பிர­தி­ய­மைச்சர் அஜித் பி. பெரேரா கோரிக்கை விடுத்தார்.

சவூ­தியில் கல்­லெ­றிந்து கொலை செய்­யப்­ப­ட­வுள்ள இலங்கைப் பெண்ணின் உயிரை பாது­காக்க இன, மத கட்சி பேத­மின்றி இலங்­கை­யர்கள் நாம் இணைந்து செயற்­பட வேண்டும் என்றும் பிர­தி­ய­மைச்சர் சபையில் குறிப்பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற வர­வு-­செ­லவுத் திட்­டத்தின் தேசிய பாது­காப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்­பான அமைச்­சுக்­களின் மீதான குழு நிலை விவா­தத்தில் உரை­யாற்றும் போதே பிர­தி­ய­மைச்சர் அஜித் பி.பெரேரா இவ்­வாறு தெரி­வித்தார்.

பிர­தி­ய­மைச்சர் சபையில் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்

சவூதி அரே­பி­யாவில் இலங்கைப் பெண் கல்­ல­டித்து கொலை செய்யப்படுவதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் தனது பெயரை வெளி­யிட வேண்டாம். அதனால் தனது குடும்­பத்­திற்கு பாதிப்பு ஏற்­படும் எனத் தெரி­வித்­துள்ளார்.

எனவே அந்த பெயர் தெரி­யாத சகோ­தரி கொலை செய்­யப்­ப­டு­வது தொடர்பில் மூடி மறைக்­கப்­பட்ட செய்­தியை வெளிப்­ப­டுத்­தி­ய­மைக்­காக சுமந்­திரன் எம்.பி.க்கு தான் நன்றி தெரி­விக்­கின்றேன். ரிஷானா நபீக் சவூதி அரே­பி­யாவில் கொலை செய்­யப்­பட்ட போது அதனை தடுக்க நாம் முயற்­சி­களை மேற்­கொண்டோம்.

இதனை அடிப்­ப­டை­யாக வைத்து அன்று தான் அது­தொ­டர்­பான அமைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யையும் கொண்டு வந்தேன்.

ஆனால் அன்று ரிஷானா நபீக்கை காப்­பாற்ற முடி­யாமல் போனது. இந்த பெயரை வெளி­யிட முடி­யாத இலங்கைப் பெண்­ணொ­ரு­வர் கல்­ல­டித்து கொலை செய்­யப்­ப­டுவதற்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்­வி­ட­யத்தை அரசு கவ­னத்தில் எடுக்க வேண்டும். எனவே எமது நாட்டு மக்­க­ளுக்கு தேவை­யான அளவு வேலை வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்த வேண்டும்.

இவ்­வா­றான வாய்ப்­புகள் இல்­லா­ததன் கார­ண­மா­கவே “ கொடூ­ர­மான சட்டங்கள் உள்ள இராச்­சி­யங்­க­ளுக்கு” எம்­ம­வர்கள் தொழி­லுக்கு செல்­கின்­றனர். இந்­தோ­னே­ஷியா பங்­க­ளாதேஷ் நாடுகள் தற்­போது வெளி­நா­டு­க­ளுக்கு பணிப்­பெண்­களை அனுப்­பு­வ­தில்லை. இந் நிலை­மைக்கு நாம் வரவேண்டும்.

எனவே கொடூரமான சட்டங்களை அமுல்படுத்தும் “சவூதி அரேபியாவுக்கு” இலங்கையர்களை அனுப்புவதை தடை செய்ய வேண்டும் என்றார்.