நல்லாட்சியில் அமைச்சர்களுக்கு வாகனங்கள் : விலைப் பட்டியலை பார்த்தால் அதிர்ந்து போவீர்கள் 

Published By: Raam

08 Jun, 2016 | 05:23 PM
image

நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள தருணத்தில் நல்லாட்சியின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள்  மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உள்ளடங்களாக 30 அமைச்சர்களுக்காக 118 கோடியே 25 இலட்சம் ரூபா கோரி, நேற்று பாராளுமன்றத்தில் குறை நிரப்பு மதிப்பீட்டு செலவு தொகை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையின் பிரகாரம்  30 அமைச்சர்களுக்கு வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கான ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரம் வெளியிடப்படுள்ளது.

  • பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி மற்றும் பிரதி அமைச்சர் அனோமா கமகே - ரூபாய் 7 கோடி.

  • உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேரவர்தனவிற்கு இரண்டு வாகனங்களும் பிரதியமைச்சர் நிமால் லன்சாவுக்கு ஒரு வாகனமும் - 9 கோடியே 90 இலட்சம்.

  • தொலை தொடர்பு மற்றும் டிஜிடல் தொழில்நுட்ப அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ மற்றும் பிரதியமைச்சர் தாராநத் பஸ்நாயக்க – 9 கோடியே 10 இலட்சம்.

  • திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிற்கு இரண்டு வாகனங்கள் - ரூபாய் 5 கோடி

  • சர்வதேச வர்த்தகம் மற்றும் மூலோபாய இராஜங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவிற்கு இரண்டு வாகனங்கள் - ரூபாய் 3 கோடியே 50 இலட்சம்.

  • நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா மற்றும் பிரதியரமைச்சர் சுமேதா ஜி.ஜயசேன -ரூபாய் 7 கோடி.

  • பிரதி அமைச்சர் லஷந்த அழகியவன்னவிற்கு 5 கோடியே 60 இலட்சம்.

  • சுற்றுலாதுறை பிரதி அமைச்சர் அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவிற்கு 5 கோடியே 60 இலட்சம்.

  • அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் பிரதி அமைச்சர் துனேஷ் கன்கந்த – 6 கோடியே 30 இலட்சம்.

  • வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஸ்ஸ நாணயக்காரவிற்கு – ரூபாய் 2 கோடியே 80 இலட்சம்.

  • மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சிம்பலாபிட்டியவிற்கு - ரூபாய் 3 கோடியே 50 இலட்சம்

  • மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரம் - 3 கோடியே 50 இலட்சம்.

  • நீர் பாசன இராஜஙக அமைச்சர் வசந்த சேனாநாயக்கவிற்கு - 3 கோடியே 50 இலட்சம்.

  • நீதி அமைச்சர் விஜயதஸா ராஜபக்ஷ மற்றும் பிரதி அமைச்சர் துஷ்மன் மித்ரபால – 7 கோடி.

  • மீள் குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் பிரதியமைச்சர் பிரியங்கர ஜயரத்ன - ரூபாய் 3 கோடியே 50 இலட்சம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20