இராணுவச் சிப்பாயைத் தாக்கி விட்டு சந்தேகநபர் தப்பி ஓட்டம்

Published By: Daya

16 Jan, 2020 | 11:26 AM
image

இராணுவச் சிப்பாயைத் தாக்கியவரைக் கைது செய்யும் நோக்குடன் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3 மணி தொடக்கம் இந்த சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று தைப்பொங்கல் தினத்தன்று பிற்பகல் இராணுவச் சிப்பாய் ஒருவர் பொதுமகனால் தாக்கப்பட்டார்.

வீதியைக் கடக்க முற்பட்ட சிறுமி ஒருவரை மோதி விபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தி வந்தார் என இராணுவத்தினர் குறித்த சந்தேககநபரைக் கண்டித்தனர்.

இதன்போது அந்த நபரின் உறவினர்கள் கூடியதால் துணிவடைந்த குறித்த சந்தேகநபர் இராணுவச் சிப்பாயைத் தாக்கியுள்ளார். சிப்பாயைத் தாக்கிவிட்டு அனைவரும் அந்த இடத்திலிருந்து தப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் நாகர்கோவில் பகுதியில் இன்று அதிகாலை 3 மணி தொடக்கம் சுற்றிவளைக்கப் பட்டுள்ளது.

நாகர்கோவில் பகுதியிலிருந்து எவரும் வெளியில் செல்லவோ, வெளியிலிருந்து எவரும் உள்ளே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை.

சந்தேகநபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் பொலிஸார், இராணுவச் சிப்பாயைத் தாக்கியவரை இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33