வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் அந்த பிரதேச அபிவிருத்தி தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது - மஹிந்தானந்த

Published By: Priyatharshan

16 Jan, 2020 | 06:47 AM
image

மலையகத்தைப்போன்று வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் அந்த பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அதுதொடர்பாக ஆராய ஜனாதிபதி வடக்குக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கின்றார் என அரசாங்க ஊடக பேச்சாளரும் ராஜாங்க அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

மின்சக்தி எரிசக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மலையகத்தைப்போன்று வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் அந்த பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அதுதொடர்பாக ஆராய ஜனாதிபதி வடக்குக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கின்றார். 

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களித்து வருகின்றனர். கூட்டமைப்பு கடந்த அரசாங்கத்துடன் ஒன்றாக இருந்தபோதும் அந்த பிரதேசத்தின் அபிவிருத்திக்கோ மக்களின் பொருளாதார அபிவிருத்திக்கோ, அரச தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கவோ கடந்த 5 வருடங்களில் எதனையும் செய்யவில்லை.

ஆனால் கூட்டமைப்பினர் வடக்கு, கிழக்கு மக்களுக்கு எதனையும் செய்யாவிட்டாலும் அவர்களின் தேவைகளை அரசாங்கத்தின் மூலம் நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றனர். கொழும்பில் தனி வீடுகள் அவர்களுக்கு இருக்கின்றன, அவர்களின் பிள்ளைகள் அனைவரும் வெளிநாடுகளில் கல்வி கற்றுவருகின்றனர். இவற்றையல்லாம் அறிந்தும் தமிழ் மக்கள் எதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கின்றார்கள் என்று தெரியவில்லை.

அதேபோன்று கோத்தாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றால் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எந்த அபிவிருத்தியையும் செய்யமாட்டார் என பிரசாரம் மேற்கொள்ளப்பட்டடிருந்து. 

தற்போது அவர் சிங்கள மக்களின் பெரும்பான்மையானர்களின் வாக்குகளாலேயே வெற்றிபெற்றிருக்கின்றார். இருந்தபோதும் தனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் ஜனாதிபதி சேவை செய்துவருகின்றார் என்பது கடந்த 56 நாட்களில் மேற்கொண்டிருக்கும் வேலைத்திட்டங்களில் இருந்து புரிந்துகொள்ளலாம். அதனால் கோத்தாய ராஜபக்ஷ சொல்வதை செய்யும் தலைவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10