இன்று தீர்வு ! சஜித் தலைமையில் கூட்டணியமைத்து பொதுத்தேர்தலில் போட்டி -  நளின் பண்டார 

Published By: Priyatharshan

16 Jan, 2020 | 06:27 AM
image

(செ.தேன்மொழி)

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் பொதுக் கூட்டணி அமைத்து பொது தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்றைய தினம் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இறுதி தீர்மானத்தை எடுப்பதாகவும் கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் மிகவும் காலங்கடத்தப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலும் நெருங்குகின்றமையால் மேலும் கலங்கடத்தப்பட்டு வருவதில் எமக்கு எந்தவித இலாபத்தையும் பெற்றுக்கொள்ள முடியாது. இதனால் இன்றைய  தினக்கூட்டத்தின் போது தலைமைத்துவம் தொடர்பில் இறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். 

தலைமைத்துவம் தொடர்பில் நீண்ட போச்சுவார்த்தைகள் கட்சிக்குள் இடம்பெற்று வருகின்றது. இதன்போது சபாநாயகர் கரு ஜயசூரியவின் பெயரும் முன்வைக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இவருக்கு தலைத்துவம் வழங்குவது தொடர்பிலும் யாரும் இணக்கம் தெரிவிப்பதாக தெரியவில்லை.  உண்மையிலே கடந்த 2015 ஆம் ஆண்டே இவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருந்தால் இன்று எமது கட்சிக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

அன்றைய தினம் இவரின் பெருமையை அறிந்திராதவர்கள் இன்று அவரின் பெருமையை தெரிவித்து வருகின்றனர். ஆனால் பொதுத்தேர்தலில் பெரும்பான்மையை பெறுவதற்காக சஜித்தின் தலைமையில் போட்டியிட்டுவதே தற்போது சாதகமாக அமையும் என்று நாங்கள் கருதுகின்றோம்.

ஜனாதிபதி ஒரு கட்சியிலும் , பிரதமர் வேறொரு கட்சியிலும் ஆட்சி நடத்தியதற்கான வரலாற்று சான்றுகள் எம்மிடம் இருக்கின்றது. இதனை மீண்டும் ஏற்படுத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் இந்த மாற்றத்தை விரும்புவார் என்றே நாங்கள் கருதுகின்றோம். அவர்கள் கட்சிக்குள்ளும் அமைதியான முறையில் முரண்பாடுகள் இடம்பெற்று வருவதை நாங்கள் அறிவோம். இதனால் அவர் சஜித் போன்ற ஒரு நபரை பிரதமராக கொண்டு செயற்பட விரும்பலாம்.

பலமான பொது கூட்டமைப்பை அமைத்துக்கொண்டு சஜித்தின் தலைமையில் செயற்பட்டால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறமுடியும் என்று நாங்கள் கருதுகின்றோம். ஆனால் இதனை அவரால் மாத்திரம் நிறைவேற்ற முடியாது. கட்சியின் ஏனைய பலரும் அதற்கான ஒத்துழைப்பு பெற்றுக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08