தேசிய அரசாங்கத்தின் பெறுமதி தெரியாமல் இன்று பலர்.!

Published By: Robert

08 Jun, 2016 | 04:49 PM
image

இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து அமைத்துள்ள தேசிய அரசாங்கத்தின் பெறுமதி தெரியாமலேயே அரசாங்கத்துக்குள் இன்று பலர் இருக்கின்றனர் என்று  அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார்.  

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு தகவல் வெளியிடுகையிலேயே அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில் 

தேசிய அரசாங்கம் என்பதற்கான வரைவிலக்கணம் என்னவென்பதை அறியாமல் அரசாங்கத்துக்குள்ளும் பலர் இன்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.  அமைச்சர்களின் எண்ணிக்கை 90 என்று கூறப்படுகின்றது. 

ஆனால் 1956 ஆம் ஆண்டிலிருந்து ஒன்றுக்கொன்று எதிர்ப்பாளர்களாக இருந்த   இரண்டு பிரதான கட்சிகளும் இன்று ஒன்றிணைந்துள்ளன. அதாவது தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளன. இதன்மூலம் பல சாதனைகளை எம்மால் முன்னெடுக்க முடியும். 

தேசிய அரசாங்கம் என்று வரும்போது சில சிக்கல்கள் தோன்றும். ஆனால் தேசிய அரசாங்கத்தின் பெறுமதி தெரியாமல் பலர் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.  குறிப்பாக அரசாங்கத்தில் இருக்கின்ற சிலருக்கே இந்த தேசிய அரசாங்கத்தின் பெறுமதி தெரியவில்லை என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37