1000 ரூபா சம்பள உயர்வு மகிழ்ச்சியான செய்தி : தமிழர்களின் ஏனயை பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு- டக்ளஸ்

Published By: Priyatharshan

16 Jan, 2020 | 06:06 AM
image

 (ஆர்.விதுஷா)

தோட்டத்தொழிலாளர்களுடைய   1000  ரூபா  சம்பள  பிரச்சினைக்கு தீர்வு  கிடைக்கப்பெற்றுள்ளமை  தைத்திருநாளன்று   மலையக மக்களுக்கு கிடைத்துள்ள  மகிழ்ச்சிகரமான  செய்தி என தெரிவித்த  மீன்பிடி  நீர்வளத்துறை  அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா,  தமிழ் மக்களுடைய  பிரச்சினைகளுக்கும் தமது அரசாங்கம் கூடிய  விரைவில்  தீர்வினை  பெற்றுக்கொடுக்கும்  எனவும் குறிப்பிட்டார்.  

தைப்பொங்கல்  பண்டிகை  தினத்தை முன்னிட்டு நேற்று புதன்கிழமை  கொழும்பு -முகத்துவாரம்   ஸ்ரீவெங்கடேஷ்வர் மஹா விஷ்ணு கோவிலில்  இடம்பெற்ற  விசேட வழிபாடுகளில்  பிரதமர்  மஹிந்த  ராஜபக்ஷ  மற்றும் அமைச்சர்  டக்ளஸ்  தேவானந்தா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.  

இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறியதாவது ,  

தை  பிறந்தால்  வழி  பிறக்கும் என்பார்கள்  அந்த வகையில்  ,  இந்த தைப்பொங்கல்    மகிழ்ச்சி  கரமானதாக  அமைந்துள்ளதுடன், எதிர்காலம்  தொடர்பான நம்பிக்கையையும்    ஏற்படுத்தியுள்ளது.  

தோட்டத்தொழிலாளர்கள்  நீண்ட காலமாக  சம்பள உயர்வுகோரி  போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில்  அந்த பிரச்சினைக்கு தீர்வு  காணும்  முகமாக  எங்களுடைய  அரசாங்கம் 1000  ரூபா சம்பள  உயர்வை  அவர்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.  

அத்துடன்,  பிரதமர் மஹிந்த  ராஜபக்ஷ கடந்த  செவ்வாய்க்கிழமை    தமிழர்களுடைய  பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுத்தருவதாக  கூறியிருக்கின்றார்.  

ஆகவே  , கூடிய  விரைவில்  தமிழ்  மக்களுடைய  பிரச்சினைக்கும் எமது அரசாங்கம்  தீர்வினை  பெற்றுக்கொடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11