1000 ரூபா சம்பள உயர்வு மார்ச் 1 முதல் அமுல் ; தோட்ட கம்பனிகளுக்கு நெருக்கடி ஏற்படாத வகையில் சிறப்பு சலுகைகள்

Published By: Priyatharshan

15 Jan, 2020 | 07:46 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பெருந்தோட்ட  மலையக  தொழிலாளர்களுக்கு  மார்ச் மாதம் 01 ஆம் திகதி முதல் நாளாந்த குறைந்த வேதனம் ஆயிரம் ரூபா  வழங்க  அமைச்சரவை   அனுமதி  கிடைக்கப் பெற்றுள்ளது.

அத்துடன்  தோட்ட  கம்பனிகளுக்கும் நெருக்கடி ஏற்படாத  வகையில்  நிவாரணம் வழங்கவும்   தீர்மானிக்கப்பட்டுள்ளது என   பெருந்தோட்ட  மற்றும் ஏற்றுமதி  விவசாய  அமைச்சர்   ரமேஸ்  பதிரண  தெரிவித்தார்.

அரசாங்க   தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை  இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும்  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த குறைந்த சம்பளம் 1000 ரூபா வழங்கப்படும் என்று  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார். 

மலையக தொழிலாளர்கள்  காலம்காலமாக  நியாயமாக  சம்பள கோரிக்கையினை முன்வைத்து தொடர் போராட்டங்களை  முன்னெடுத்தார்கள். 

கடந்த அரசாங்கத்தில்  இப்போராட்டங்கள் முழுமையாக அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. அரசாங்கத்தின்  நிலையற்ற தன்மையினால் தோட்ட கம்பனிகள்   1000  சம்பளத்தை வழங்க  முடியாது என்ற உறுதிப்பாட்டில் இருந்தார்கள்.

அபிவிருத்தி ரீதியில்  பின்னடைந்துள்ள   மலையக மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் .   சம்பள அதிகரிப்பு தொடர்பில்  கடந்த அமைச்சரவை கூட்டத்தில் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர்  ஆறுமுகம் தொண்டமான் முன்வைத்த யோசனைக்கு  அமைச்சரவை   அங்கிகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய மார்ச் மாதம் 01ம் திகதியில் இருந்து  மலையக மக்களின் நாட்சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்படும்.

தோட்ட கம்பனிகளின் உற்பத்திகளுடன் தொடர்புடைய  வரிகளை  குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு தெரிவு செய்யப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நிவாரணமும் வழங்கப்படும். 

தற்போது நடைமுறையில் உள்ள வரி விலக்கு  , உர மானியம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் அதில் உள்ளடங்கும். இந்த நிவாரணங்கள் பெருந்தோட்ட கம்பனிகளுக்கே கிடைப்பதால் அதன் நன்மைகளை தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைக்கப் பெறும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41