இராணுவத் தளபதிக்கு ரிஷாத் அழுத்தம்?: விசாரணை ஆரம்பம் - நீதிமன்றுக்கு அறிவிப்பு

Published By: J.G.Stephan

14 Jan, 2020 | 08:21 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கைது செய்­யப்­பட்ட பயங்­க­ர­வாத சந்­தேக நபர் ஒரு­வரை விடு­விக்க பாது­காப்புத் தரப்­புக்கு அழுத்தம் பிர­யோ­கித்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக சிறப்பு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரி­வினர் நேற்று கொழும்பு பிர­தான நீதி­வா­னுக்கு அறி­வித்­தனர்.  

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2,3,4,5 ஆம்  அத்­தி­யா­யங்­களின் கீழும் 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க  சிவில், அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்ப்ட்டு சட்­டத்தின்  ( ஐ.சி.சி.பி.ஆர்.) 3 (1), 3 (2) ஆம் அத்­தி­யா­யங்­களின் கீழும்  தண்­டனை சட்டக் கோவையின் 486 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழும் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக கரு­தியே இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

 இது குறித்து சட்­டத்­த­ரணி பிரே­மநாத் சி தொல­வத்த பொலிஸ் தலை­மை­ய­கத்தில் செய்த முறைப்­பாடு, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடாக மேல் மாகாண த்ற்கு பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரிடம் கைய­ளிக்­கப்­பட்டு அவரின் கீழ் மேல் மாகாண தெற்கு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பனிப்­பா­ளரின் ஆலோ­ச­னைக்கு அமைய விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக  நேற்று கொழும்பு பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்­ன­வுக்கு அந்த விசா­ரணைப் பிரி­வி­னரால் அறிக்கை சமர்ப்­பிக்­கப்ப்ட்­டது.

 உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை அடுத்து கைது செய்­யப்­பட்ட பயங்­க­ர­வாத  சந்­தேக நபரை விடு­விக்க  அப்­போ­தைய அமைச்­ச­ரான  ரிஷாத் பதி­யுதீன் அப்­போ­தைய இரா­ணுவ தள­பதி மகேஸ் சேன­நா­யக்­கவை தொலை­பே­சியில் அழைத்­தமை சட்­டத்தின் ஆட்சி மீதான பாரிய தாக்­குதல் என முறைப்­பாட்­டாளர் தமது முறைப்­பாட்டில் தெரி­வித்­துள்­ள­தா­கவும், இதே போன்று மேலும் பல பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­களை விடு­விக்க ரிஷாத் பதி­யுதீன் அழுத்தம் கொடுத்­தாரா என்­பது குறித்தும் தேட வேண்டும் என அவர் கோரி­யுள்­ள­தா­கவும் பொலிஸார் மன்­றுக்கு நேற்று  விஷேட அறிக்கை ஊடாக தெரி­வித்­தனர்.

 இந் நிலையில் ரிஷாத் பதி­யுதீன் சந்­தேக நபரை விடு­விக்க அழுத்தம் கொடுத்­தமை தொடர்பில் அப்­போ­தைய இரா­ணுவ தள­பதி  செய்­தி­யாளர் சந்­திப்­பொன்­றினை நடாத்தி வெளி­யிட்ட கருத்­துக்கள் ஊட­கங்­களில் வெளி­யான நிலையில்,  அவற்றை ஒளி­ப­ரப்­பிய 5 ஊடக நிறு­வ­னங்­களில் உள்ள செம்­மைப்­ப­டுத்­தப்­ப­டாத அந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் காணொ­ளி­களை  விசா­ர­ணை­க­ளுக்கு சமர்ப்­பிக்க உத்­த­ர­விட வேண்டும் என இதன்­போது விசா­ர­ணை­யா­ளர்­களால் நீதிவானிடம் கோரப்பட்டது.

 அந்த கோரிக்கைக்கு அனுமதியளித்த பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன,  இந்த விவகாரத்தில்  விசாரணைகளை முன்னெடுத்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13