ஆணைக்குழுவிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க  தயார் : ஈ.ரி.ஐ . வைப்பாளர்களை  பாதுகாப்பதற்கான  சுயாதீன  அமைப்பு

13 Jan, 2020 | 04:01 PM
image

(ஆர்.விதுஷா)

எதிரிசிங்க  நம்பிக்கை  முதலீட்டு  நிறுவனத்தில் ( ஈ.ரி.ஐ) இடம் பெற்றதாகக்  கூறப்படும்  நிதி  மோசடி  தொடர்பில்  ஆராய்வதற்காக   ஜனாதிபதி  கோத்தாபய ராஜபக்ஷ  விசாரணை விசாரணைக் குழுவை நியமித்துள்ளதையிட்டு மகிழ்ச்சி  வெளியிட்டிருக்கும் ஈ.ரி.ஐ.  வைப்பாளர்களை  பாதுகாப்பதற்கான  சுயாதீன  அமைப்பு, ஆணைக்குழு  விசாரணைகளுக்கு  முழுமையான  ஒத்துழைப்பை  வழங்க  தயாரகவுள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளது. 

ஈ.ரி.ஐ.நிதி  நிறுவனத்தில்  இடம் பெற்றதாகக்  கூறப்படும் நிதி  மோசடி தொடர்பில்  பாதிக்கப்பட்ட தரப்பினர்   இரண்டு  வருடங்களாக எதிர்ப்பு  ஆர்ப்பாட்டங்களை  மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில்  கடந்த திங்கட்கிழமை  ஆர்பாட்டத்தில்  ஈடுபட்டிருந்த   ஈ.ரி.ஐ.  வைப்பாளர்களை  பாதுகாப்பதற்கான  சுயாதீன  அமைப்பினை  சேர்ந்தோர்,  நிதியமைச்சின் செயலாளரை சந்தித்து   இவ்விடயம்  தொடர்பில் ஆராய்வதற்காக  விசாரணை ஆணைக்குழுவை  அமைக்குமாறு  கோரிக்கை  விடுத்திருந்தனர். 

இந்நிலையில்  , ஜனாதிபதி  கோத்தாபய ராஜபக்ஷ  கடந்த  வெள்ளிக்கிழமை இவ்விடயம்  தொடர்பில்  விசாரணைகளை மேற்கொள்வதற்காக  விசாரணை  ஆணைக்குழுவினை  நியமித்திருந்தார்.

இந்நிலையில்   ஈ.ரி.ஐ நிதி  நிறுவனத்தில்  வைப்பிலிட்டவர்களை  பாதுகாப்பதற்கான   சயாதீன அமைப்பின்   நிலைப்பாடு தொடர்பில்  அந்த   அமைப்பின் தலைவி   அனுஷா  ஜெயந்தியிடம் வினவிய போதே  அவர் இதனை  தெரிவித்தார்.

ஒய்வு  பெற்ற  உயர் நீதிமன்ற  நீதியரசர்  கே.ரி  சித்ரசிறி அந்த  ஆணைக்கழுவின் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன்,  ஏனைய  பிரதிநிதிகளாக  ஓய்வு  பெற்ற   சொலிசிட்டர் ஜெனரல்  சுஹத  கம்லத் மற்றும்  சிரேஷ்ட வங்கியாளரான  டீ.எம்.குணசேகர  ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய  ஈ.ரி.ஐ  நிதி நிறுவனத்தில்  இடம்பெற்றதாக  கூறப்படும் மோசடி தொடர்பில்  விசாரணைகளை  மேற்கொள்வதற்கு  இந்த  ஆணைக்குழுவின் ஊடாக  விசேட  அதிகாரம் வழங்கப்பட்டுள்ளளமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்