இலங்­கையில் எரி­பொருள் தட்­டுப்­பாட்­டுக்கு இட­ம­ளியோம் - அரசாங்கம்

13 Jan, 2020 | 03:52 PM
image

(எம்.மனோ­சித்ரா)

ஈரா­னுக்கும் அமெ­ரிக்­கா­வுக்­கு­மி­டையில் ஏற்­பட்­டுள்ள மோதல்­களால் இலங்­கையில் எரி­பொருள் தட்­டுப்­பாடு ஏற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­படமாட்­டாது எனத் தெரி­வித்த மின்­சக்தி மற்றும் வலு­சக்தி அமைச்சர் மஹிந்த அம­ர­வீர, எரி­பொருள் விலை அதி­க­ரிப்பு தொடர்­பிலும் அர­சாங்கம் தீர்­மானம் எத­னையும் எடுக்­க­வில்லை என்றும் குறிப்­பிட்டார்.

அம்­ப­லாந்­தோட்ட பிர­தே­சத்தில் நடை­பெற்ற மக்கள் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே  இதனைத் தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது :

தற்­போது ஈரா­னுக்கும் அமெ­ரிக்­கா­வுக்கு­மி­டை­யி­லான மோதல்கள் உக்­கி­ர­ம­டைந்­துள்­ளன. இந்த மோதல்கள் யுத்­த­மாக உரு­வா­கினால் முழு உல­குக்குமே பாரிய பாத­க­மான விளைவை உண்­டாக்கும். இதனால் ஏற்­படும் விளை­வு­களை நினைத்து கூட பார்க்க முடி­யா­த­வை­யாக இருக்கும்.

முழு உல­கமும் அபி­வி­ருத்தி அடையும் போது போர் தொழில்­நுட்­பமும் பாரி­ய­ளவில் வளர்ச்­சி­ய­டைந்­துள்­ளது. பலம் வாய்ந்த நாடுகள் ஏனைய நாடு­க­ளை­விட போர் தொழி­ல்நுட்­பத்தை விருத்­தி­யடையச் செய்­வ­தற்கே பாடு­பட்­டி­ருக்­கின்­றன. அதன் பிர­தி­பலம் எந்­த­ளவு பார­தூ­ர­மா­னது என்­பது கற்­பனை செய்து பார்க்க முடி­யா­தது.

இந்த மோதல்­களால் எமது நாட்­டுக்கு பாதிப்­புக்கள் ஏற்­படும் போது நாம் எவ்­வாறு அவற்­றுக்கு முகங்­கொ­டுப்­பது? அந்த நாடு­க­ளுக்­கி­டை­யி­லான மோதல்கள் நிச்­சயம் இலங்­கை­யிலும் தாக்கம் செலுத்தும். எமக்கு மாத்­தி­ர­மல்ல. ஏனைய நாடுகளிலும் தாக்கம் செலுத்தும். எவ்­வா­றி­ருப்­பினும் நாம் அவற்­றுக்கு முகம் கொடுக்க தயா­ரா­கவே இருக்­கின்றோம்.

இந்த மோதல்­களால் இலங்­கையில் எரி­பொருள் தட்­டுப்­பாடு ஏற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்க நாம் தயாராக இல்லை. அதே போன்று இதனை காரணம் காட்டி எரிபொருள் விலை அதிகரிக்கப்படவும் மாட்டாது. அவ்வாறான எந்த தீர்மானத்தையும் அரசாங்கம் இது வரையில் எடுக்கவில்லை என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44