எல்பிட்டிய பெத்தேகம பாலத்திலிருந்து தாய் மற்றும் மகள் இருவரையும் தாக்கி ஜின் கங்கையில் தள்ளிய குற்றச்சாட்டில் தொடர்புடைய  5 சந்தேகநபர்களின் விளக்கமறியல் ஜுன் 20 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவினை பெத்தேகம மேலதிக நீதவான் சந்திம எதிரிமன்னே பிறப்பித்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் தாய் உயிரிழந்ததுடன் மகளை கிராம மக்கள் காப்பாற்றியிருந்தனர்.

குறித்த சம்பவத்தின் பிரதான சாட்சியான சம்பவத்தில் காயமடைந்த மகள் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினாலேயே குறித்த சந்தேகநபர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.