குறைந்த விலையில் டொலர் நாணயத்தாள்களை பெற்றுத்தருவதாக மோசடி ; நால்வர் கைது

13 Jan, 2020 | 02:14 PM
image

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உவர்மலை பிரதேசத்தில் சந்தைபெறுமதியை விட குறைந்த விலைக்கு டொலர் நாணயத்தாள்களை மாற்றித்தருவதாக மோசடியில் ஈடுபட்ட ஏழு சந்தேக நபர்களை கைது செய்ததாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து பத்து இலட்சம் ரூபா ரொக்கப் பணமும், ஒரு இலட்சத்து எண்பத்து ஐயாயிரம் ரூபா பெறுமதியான ஆயிரம் அமெரிக்கா டொலர்களும் மீட்கப்பட்டதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை பிரதேசத்தைச்சேர்ந்த நால்வரும்,பொலநறுவை மாவட்டம் மெதலகிரி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், திருகோணமலை மாவட்டம் செல்வநாயகபுரம் மற்றும் வான்அலை பிரதேசங்களைச்சேர்ந்த தலா ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இம்மோசடி வேலை நிமித்தம் பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்றும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மோசடிக் கும்பல் கந்தளாய் பிரதேச நபர் ஒருவரை தொடர்புகொண்டு தம்மிடம் அமெரிக்க டொலர்கள் இருப்பதாகவும் டொலர்களை சந்தை மதிப்பை விட குறைந்த விலைக்கு வாங்க முடியும் என பேரம்பேசி கந்தளாய் நபரை வரவழைத்து அவரிடமிருந்து பத்து லட்சம் ரூபாயை அபகரித்துக்கொண்டு ஓடியநிலையில் பணம் பறிகொடுத்த நபரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய திருகோணமலை தலைமையக பொலிஸார் துரித நடவடிக்கை மேற்கொண்டு குறித்த நபர்களை கைதுசெய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27