ரணில் -சஜித் - கரு தலை­வ­ரா­வது யார் ? முடி­வில்­லையேல் இர­க­சிய வாக்­கெ­டுப்பாம் !

13 Jan, 2020 | 12:47 PM
image

(ஆர்.யசி)

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மைத்­துவம் குறித்து கட்­சிக்குள் பல­வித மாறு­பட்ட கருத்­துக்கள் நில­வு­கின்ற நிலையில் கட்­சியின் தலை­மைத்­துவ மாற்றம் குறித்து எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை இறுதித் தீர்­மானம் ஒன்­றினை எட்ட முயற்­சிப்­ப­தாகவும்  தீர்­மானம் எட்­டப்­ப­டா­விட்டால் இர­க­சிய வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும் எனவும் ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் லக்ஸ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மைத்­துவ தீர்­மா­னங்கள் குறித்து வின­விய போதே அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும்  குறிப்­பி­டு­கையில்,

ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் தலை­மைத்­துவ மாற்றம் குறித்து கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. எதிர்க்­கட்சி தலைவர் சஜித் பிரே­ம­தா­சவை கட்­சியின் தலை­வ­ராக்க வேண்டும் எனவும் பிர­தமர் வேட்­பா­ள­ராக அவ­ரையே கள­மி­றக்க வேண்டும் எனவும் கட்­சிக்குள் ஒரு சாரார் கூறி வரு­கின்­றனர். எனினும் மல்­வத்து அஸ்­கி­ரிய பீடங்கள் மற்றும் அம­ர­புர நிகா­ய­வினர் கரு ஜெய­சூ­ரி­யவை தலை­வ­ராக்க வேண்டும், பெளத்த சிங்­கள வாக்­கு­களை பலப்­ப­டுத்த வேண்டும் என்ற கருத்­துக்­க­ளையும் ஆலோ­ச­னை­க­ளையும் வழங்­கி­யுள்­ளனர்.  

எனவே எதிர்­வரும்  16 ஆம் திகதி மீண்டும் கட்­சிக்குள் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­படும், அதில் இறுதி தீர்­மானம் ஒன்­றினை எடுக்க வேண்டும் என்றே அனை­வரும் கூறு­கின்­றனர். ஆகவே  16 ஆம் திகதி இறுதித் தீர்­மானம் எட்­டப்­படும் என நாமும் எதிர்­பார்க்­கின்றோம். அவ்­வாறு முடி­யாமல் போனால் இர­க­சிய வாக்­கெ­டுப்பு ஒன்­றினை நடத்தி தலை­மைத்­துவம் குறித்து தீர்­மானம் ஒன்­றினை எட்ட முடியும். தற்­போ­தைய தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய மற்றும் எதிர்க்­கட்சி தலைவர் சஜித் பிரே­ம­தாச ஆகிய மூவரில் யார் தலைவர் என்­பதை இர­க­சிய வாக்­கெ­டுப்பு மூல­மா­கவும் தீர்­மா­னிக்க முடியும்.

அது­மட்டும் அல்ல கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் நாம் தோல்­வியை சந்­திக்க  கட்­சிக்குள் சிலரும் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன போன்றவர்களுமே காரணமாகும். ஆகவே இனியும் கட்சியை நாம் பலவீனப்படுத்த தயாராக இல்லை. கட்சிக்குள் உள்ள முரண்பாடுகளை விரைவில் தீர்த்து தேர்தலுக்கு முகங்கொடுப்போம்  என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32