வாள் மற்றும் கத்தி முனையில் அச்சுறுத்தி யாழில் துணிகரக்கொள்ளை 

Published By: Priyatharshan

12 Jan, 2020 | 09:59 PM
image

யாழ்ப்பாணம், குப்பிழான் தெற்கு வீரமனைப் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறையின் புகை போக்கியைப் பிரித்து உள்ளிறங்கிய கொள்ளைக் கும்பல் குறித்த வீட்டிலிருந்தவர்களை வாள் மற்றும் கத்தி முனையில் கடுமையாக அச்சுறுத்தி அங்கிருந்த தங்க நகைகள் பெறுமதிவாய்ந்த கைத்தொலைபேசிகள் மற்றும் ஒருதொகைப் பணம் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.

குறித்த கொள்ளைச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (11) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த வீட்டின் உரிமையாளர்களான கணவனும், மனைவியும் வீட்டில் இல்லாத நிலையில் அவர்களது நெருங்கிய உறவினரான இருவர் வீட்டின் பாதுகாப்புக் கருதி வீட்டில் தங்கியிருந்துள்ளனர். 

இந்நிலையில் வீட்டுச் சமையலறையின் புகை போக்கியைப் பிரித்து மேற்படி வீட்டுக் கிணற்றடியில் வாளியுடன் இணைக்கப்பட்டிருந்த கயிற்றை எடுத்துக் கட்டி உள்ளிறங்கிய கொள்ளையர்கள் வீட்டிலிருந்த இளைஞன் மற்றும் நடுத்தர வயதுடையவரை வாள் மற்றும் கத்தி முனையில் அச்சுறுத்தி வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடியுள்ளனர்.

அதிகாலை ஒரு மணி முதல் 02.30 மணி வரை குறித்த வீட்டில் தங்கிநின்ற கொள்ளையர்கள் வீட்டின் பாதுகாப்புக்காக நின்றிருந்த இருவர் மீதும் தாலிக்கொடி எங்கே? எனக் கேட்டும் வேறு சில கேள்விகள் கேட்டும் சரமாரியாகத் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அயல் வீட்டுக்காரர் தொடர்பில் கொள்ளையனில் ஒருவன் வீட்டில் நின்றவர்களிடம் விசாரித்துள்ளான்.

அப்போது பக்கத்து வீட்டில் தாய், தகப்பனுடன் நான்கு பெடியன்களும் தற்போது வசிக்கிறார்கள் என அங்குநின்ற இளைஞன் பதிலளித்துள்ளான். அப்போது “இரண்டு பெடியன்கள் தானே இருக்கிறார்கள் ” எனக் கூறியவாறே கொள்ளையர்களில் ஒருவன் அந்த இளைஞன் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதன்போது வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஒன்றரைப் பவுண் தங்கச் சங்கிலி, கைச் சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட தங்கநகைகளையும், ஒருதொகை வெளிநாட்டுப் பணத்தையும், பெறுமதி வாய்ந்த மூன்று நவீன கைத்தொலைபேசிகளையும் கொள்ளையிட்ட கொள்ளையர்கள் “இப்போது சத்தம் போடக் கூடாது, வெளியே வரக் கூடாது” எனத் தெரிவித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சுமார் ஆறு பேர் கொண்ட கொள்ளைக் கும்பலே மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதுடன் கொள்ளையிட வந்தவர்கள் கறுப்புத் துணிகளால் தங்கள் முகங்களை மறைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மேற்படி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்துச் சுன்னாகம் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகள் மேற்கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33