இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் பயிற்றுனருமான மார்வன் அதபத்துவின் பெரியம்மா இனந்தெரியாத நபரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை வெலிகம பிரதேசத்தில் முதுகமுவ அதபத்து வத்தையிலுள்ள வீட்டில் வசித்து வந்த சோமா அத்த பத்துவே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

அவரது கழுத்து, கைப்பேசி சார்ஜர் வயரினால் ( Mobile Charger wire) நெரிக்கப்பட்டிருந்துள்ளதோடு உடலில் வெட்டுக் காயங்களையும் காணக்கிடைத்துள்ளது.

இது தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.