வவுனியா வளாகம் வவுனியா  பல்கலைக்கழகமாக மாற்ற அமைச்சரவை பத்திரம் தாக்கல்

Published By: Digital Desk 4

12 Jan, 2020 | 04:57 PM
image

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வவுனியா பல்கலைக்கழகமாக மாற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக ஈழமக்கள் ஜனநாய கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கு. திலீபன் தெரிவித்தார். 

Image result for வவுனியா வளாகம்,

இன்று அவர் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வவுனியா வளாகத்தை வவுனியா பல்கலைக்கழகமாக மாற்ற கடந்த ஆட்சிக்காலத்தில் பலரும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் முயற்சி எடுத்தவர்கள் ஏமாற்றப்பட்ட வரலாறே காணப்பட்டது. இவ்வாறு ஏமாற்றப்பட்ட விடயம் வவுனியா வளாகத்தின் செயற்பாட்டில் மாத்திரமல்ல தமிழ் மக்களின் அடிப்படைத்தேவைகளில் இருந்து அனைத்திலும் ஏமாற்றப்பட்டனர். 

இந் நிலையிலேயே எமது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்போது தமிழ் மக்கள் தொடந்தும் ஏமாற்றப்படக்கூடாது என்பதில் அக்கறையாக உள்ளார். 

ஒவ்வொரு செயற்பாட்டையும் மக்கள் நலன்சார்ந்து செயற்படுத்தி வருவதனாலேயே இன்று மக்கள் அமைச்சரின் பின் அணிதிரண்டு வருகின்றனர். 

அந்த வகையில் வவுனியா வளாகத்தினை வவுனியா பல்கலைக்கழகமாக மாற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய அதற்கான முயற்சி எடுக்கப்பட்டு தற்போது அமைச்சரவை பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

எனவே விரைவில் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைக்கழகமாக மாறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31