சிறுபான்மை மக்களுக்கு எதிரான தீர்மானங்களை எதிர்ப்போம்: குடி­யு­ரிமை விவ­காரம் தொடர்பில் இந்­திய அர­சாங்­கத்­துடன் விரைவில் பேச்சு...

Published By: J.G.Stephan

12 Jan, 2020 | 03:45 PM
image

தற்­போ­தைய அர­சாங்­கத்­துக்கு  ஆத­ரவு நல்கி நாம்  அமைச்­ச­ர­வையில்  அங்கம் வகித்­தாலும் கூட சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ரா­கவோ அல்­லது அவர்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­படும் வகை­யிலோ கொண்டு வரப்­படும் எந்த தீர்­மா­னத்­துக்கும் ஆத­ர­வ­ளிக்கப் போவ­தில்லை. நாம் எமது மக்­களின்  நலன்கள் மற்றும் பாது­காப்பு குறித்து எச்­சந்­தர்ப்­பத்­திலும் அக்­க­றை­யா­கவே செயற்­ப­டுவோம் என இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் தலை­வரும்  சமூக வலு­வூட்டல் தோட்ட உட்­கட்­ட­மைப்பு அமைச்­ச­ரு­மான ஆறு­முகன் தொண்­டமான் தெரி­வித்தார்.

அதே­வேளை, இந்­திய அர­சாங்­கத்­தினால் கொண்டு வரப்­பட்­டுள்ள குடி­யு­ரிமை சட்­ட­மூலம் தொடர்பில் இலங்கை தமி­ழர்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­படா­வண்ணம் மத்­திய அர­சுடன் பேச்சு நடத்­து­வ­தற்கு தயா­ராக இருப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்தார். வீர­கே­சரி வார­வெளி­யீட்­டுக்கு அவர் வழங்­கிய நேர்­கா­ணலின் முழு விபரம் வரு­மாறு.

கேள்வி:  சிறு­பான்மைக் கட்­சி­க­ளுக்கு பாதகம் ஏற்­படக்கூடிய வகையில் விஜே­தாஸ ராஜபக் ஷ எம்.பியால் கொண்டு வரப்­பட்­டி­ருக்கும் பிரே­ரணை தொடர்பில்? 

பதில்:  தேர்தல் தொகுதி ஒன்றில் 12.5 வீத வாக்­கு­களை ஒரு கட்சி பெற வேண்டும் என்ற விடயம் ஒரு தனி­நபர் பிரே­ர­ணை­யா­கவே கொண்டு வரப்­பட்­டி­ருக்­கின்­றது. அது சட்­ட­மா­க­வில்­லையே அதற்கு ஏன் நாம் கவ­லைப்­பட வேண்டும்? எனினும் இவ்­வி­ட­த்தில் நான் ஒரு விட­யத்தை கூறிக்­கொள்ள விரும்­பு­கிறேன். நாம் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் பக்கம் இருந்­தாலும் எந்த வகை­யிலும் சிறு­பான்மை பிர­தி­நி­தித்­து­வத்­துக்கோ அல்­லது  மக்­க­ளுக்கோ பாதகம் ஏற்­ப­டக்­கூ­டிய எந்த நகர்­வு­க­ளையும் பார்த்­துக்­கொண்­டி­ருக்க மாட்டோம். அதே­வேளை, அர­சாங்க பக்கம் இருந்து கொண்டு பேசும் அமைச்­சர்­களின் கருத்­து­க­ளுக்­கெல்லாம் பதில் கூறிக்­கொண்­டி­ருந்தால் இங்கு நாம் எமது பணி­களை முன்­னெ­டுக்க முடி­யாது. அதை ஜனா­தி­பதி சொல்­கி­றாரா என்று தான் அவ­தா­னிக்க வேண்டும். 

கேள்வி: அப்­ப­டி­யானால் தமிழில் தேசிய கீதம் பாடு­வ­தற்கு எழுந்­துள்ள சிக்­கல்கள் குறித்து என்ன கூறப்­ போ­கின்­றீர்கள்?

பதில்: மறு­ப­டியும் அதே பதி­லைத்தான் கூறுவேன். எந்த இடத்­தி­லா­வது ஜனா­தி­பதி அவ்­வாறு கூறி­னாரா? அர­சாங்கம் பக்கம் இருக்கும் அமைச்­சர்கள் அல்­லது எம்.பிக்கள் கூறு­வ­தெல்லாம் ஜனா­தி­பதி கூறி­யது என்று பொருள்­ப­டாது தானே. இதை­யெல்லாம் நாம் பொருட்­ப­டுத்த வேண்­டிய அவ­சி­ய­மில்லை. முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்த சிலர் அவ்­வாறு கூறலாம். சரி அவ்­வாறு குறித்த சிலர் கூறி விட்­டார்கள் என்று வைத்­துக்­கொள்வோம். அதற்குப் பின் இந்த நாட்டில் தமிழர் பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற நிகழ்­வு­களில் தமிழில் தேசிய கீதத்தை பாடு­வதை எவரும் நிறுத்தி விட்­டார்­களா என்ன? 

  கேள்வி: அப்­ப­டி­யானால் மேற்­குறித்த இரு விட­யங்கள் குறித்தும் பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் இடம்­பெற்றால் இ.தொ.கா அது குறித்து குரல் எழுப்­புமா?

பதில்: நிச்­ச­ய­மாக. கடந்த காலங்­க­ளிலும் நாம் குரல் எழுப்­பி­யுள்ளோம். அப்­படி ஒரு சம்­பவம் இடம்­பெற்றால் நாம் என்ன செய்­கிறோம் என பொறுத்­தி­ருந்து பாருங்­களேன்.

கேள்வி: இந்­திய அர­சாங்­கத்தின் குடி­யு­ரிமை திருத்­தச் ­சட்­டத்தில் இலங்கை அக­திகள் மற்றும் இந்­திய வம்­சா­வளி தமி­ழர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்­களே?

பதில்:  அவர்­க­ளுக்கு இரட்டை குடி­யு­ரிமை வழங்­கு­வது பற்­றிய  பேச்சுக்கள், அழுத்­தங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. நாம் அதை அவ­தா­னித்­துக்­கொண்டு தான் இருக்­கின்றோம். மட்­டு­மன்றி அவர்­களின் விருப்­பு­களும் அறி­யப்­படல் வேண்டும் என்­பதில் அக்­க­றை­யாக இருக்­கின்றோம். அது தொடர்பில் சரி­யான புள்ளி விப­ரங்­க­ளுக்­காக காத்­தி­ருக்­கிறோம். அதா­வது சென்­னையில் உள்ள இலங்கை தூத­ர­கத்தில் அது தொடர்­பான  தக­வல்­களை தரும்­படி கேட்­டுள்ளோம். உண்­மையில் எத்­த­னைப்பேர் தமி­ழ­கத்தில் இவ்­வாறு இருக்­கின்­றனர் என்­ப­தையும் அவர்­களில் எத்­த­னைப்பேர் நாடு திரும்ப ஆவ­லாக இருக்­கின்­றனர் போன்ற விட­யங்கள் பற்­றியும் தக­வல்­களை சேகரித்து வரு­கின்றோம். அது தொடர்­பான தர­வுகள் இல்­லாது பேச முடி­யாது. 

கேள்வி: சில நேரங்­களில் குடி­யு­ரிமை வழங்­காது அந்த மக்கள் மறு­ப­டியும் இலங்­கைக்கு அனுப்­பப்­பட்டால்?  

பதில்: அப்­படி நடக்கும் என்று நான் எதிர்ப்­பார்க்­க­வில்லை. ஏனெனில் குடி­யு­ரிமை திருத்­தச் ­சட்டம் என்­பது இந்­தி­யாவின் பாது­காப்பு தொடர்பில் அக்­க­றை­யுடன் கொண்டு வரப்­பட்­டி­ருக்­கின்­றது. இதில் முழு இந்­தி­யாவில் வாழும் மக்­களின் நலன்­களும் பார்க்­கப்­படும். தமி­ழ­கத்தில் குடி­யு­ரிமை இல்­லாது வாழ்ந்து வரும் அக­திகள் மற்றும் தாயகம் திரும்­பிய இந்­திய வம்­சா­வளி மக்­களை குறி­வைத்து கொண்டு வரப்­பட்­ட­தல்ல இந்த சட்டம். இதை உரியோர் புரிந்து கொள்ளல் அவ­சியம். அப்­ப­டியும் இவர்­க­ளுக்கு பாதகம் ஏற்­படும் நகர்­வுகள் ஏற்­பட்டால் அது குறித்து இந்­திய மத்­திய அர­சாங்­கத்­திடம் கதைப்­ப­தற்கு நாம் தயா­ரா­கவே இருக்­கின்றோம். ஆகவே இது குறித்து எவரும் கவ­லைப்­பட தேவை­யில்லை. 

கேள்வி: ஜனா­தி­ப­தியின் தேர்தல் வாக்­கு­று­திக்­க­மைய தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா நாள் சம்­பளம் எப்­போது கிடைக்கும்? 

பதில்:  எல்­லா­வற்­றையும் ஒரே இரவில் எதிர்­பார்த்தால் அது கடி­ன­மா­கவே முடியும். அது குறித்து பேச்­சுக்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. தேர்தல் காலத்தில் அந்த ஆயிரம் ரூபாவை எவ்­வாறு  அர­சாங்கம் பெற்­றுக் ­கொடுக்­கப் ­போ­கின்­றது என்று என்­னிடம் கேள்வி எழுப்­பப்­பட்­டது. அப்­போது நான், தேவை­யில்­லாத வரிகள் குறைக்­கப்­படும் போது செல­வீ­னங்கள் மட்­டுப்­ப­டுத்­தப்­படும். அதன் போது இதை பெற்­றுக்­கொ­டுப்­பதில் சிக்­கல்கள் இருக்­காது என்று தெரி­வித்­தி­ருந்தேன். அதன் படி ஜனா­தி­பதி சில வரி­களை குறைத்­துள்ளார். அதை அனை­வரும் அறிவர். அது போன்றே இந்த தொகையை பெற்­றுக்­கொ­டுப்­பது பற்­றிய  பேச்­சுக்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று கூட கலந்­து­ரை­யா­டல்கள் நடை­பெற்­றன. ஆகவே இது குறித்து எவரும் குழப்­பிக்­கொள்ள வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

கேள்வி: கடந்த காலங்­களில்  பல ஆசி­ரியர் நிய­ம­னங்கள் பெற்­றுக் ­கொடுக்­கப்­பட்­டாலும் கூட மலை­யக பாட­சா­லை­களில் ஆசி­ரியர் பற்­றாக்­குறை நில­வு­கி­றதே?

பதில்:  ஆமாம், முக்­கி­ய­மான சில பாடங்­க­ளுக்கு ஆசி­ரி­யர்கள் இல்லை. அதா­வது ஆங்­கிலம் மற்றும் விஞ்­ஞா­னப்­பா­டங்­க­ளுக்கே இந்த பற்­றாக்­குறை நில­வு­கி­றது. இதை நிவர்த்தி செய்­வ­தற்கு நாம் அமைச்­ச­ரவை பத்­திரம் ஒன்றை சமர்ப்­பிக்க தீர்­மா­னித்­துள்ளோம். அதா­வது குறித்த பாடங்­களை கற்­பிப்­பதில் அனு­பவம் பெற்ற  ஓய்வு பெற்ற ஆசி­ரி­யர்­களை  ஒப்­பந்த அடிப்­ப­டையில் மீண்டும்  ஆசி­ரியர் சேவையில் இணைத்து கொள்­வ­தற்­கான  தீர்­மா­னமே அது. இது விரைவில்  அமுல்­ப­டுத்­தப்­படும். அதே­வேளை எதிர்­கா­லத்தில்  மீண்டும் ஆசி­ரிய நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­டு­வ­தற்­கான திட்­டங்­க­ளையும் முன்­னெ­டுத்­துள்ளோம். 

 கேள்வி: மலை­ய­கத்தில் பல கட்­சிகள் தொழிற்­சங்­கங்கள் இருந்­தாலும் அனைத்­துமே ஒரே சமூக மக்­க­ளுக்­கா­கத்­தானே பணி­யாற்­று­கின்­றன, ஏன் அவை இணைந்து பணி­யாற்ற முடி­யாது? 

பதில்:  பணி­யாற்­ற­லாமே. அதில் எந்த  பிரச்­சி­னை­களும் இல்­லையே  எம்­மிடம் வந்தால் அது குறித்து பேசலாம்.

கேள்வி: இ.தொ.கா அதற்குத் தயாரா? 

பதில்:  இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் என்­பது மலை­ய­கத்தின் பாரம்­ப­ரிய தொழிற்­சங்கம். அதற்­கென ஒரு கொள்கை உள்­ளது. எமது செயற்­திட்­டங்­களும் அப்­ப­டி­யா­னவை. ஆகவே எமது கொள்­கை­க­ளுக்கு இணங்கக் கூடி­ய­வர்கள் மட்­டுமே எம்­மோடு இணைந்து பய­ணிக்க முடியும். அது யாராக இருந்­தாலும் சரி. அந்த கொள்­கை­க­ளா­னது மக்கள் சேவை­க­ளையும் அவர்­க­ளுக்­கான உரி­மை­க­ளையும் சரி­யான முறையில் பெற்­றுக்­கொ­டுப்­பதை அடிப்­ப­டை­யாகக் கொண்­டது. மட்­டு­மன்றி எமது அமைப்­புக்­கென்று சில கட்­டுக்­கோப்­பு­களும் உள்­ளன. எனவே அதை புரிந்து தெரிந்து அதற்­கேற்ப செயற்­ப­டக்­கூ­டி­ய­வர்­களே தற்­போது அத­னுடன் இணைந்து பய­ணிக்­கின்­றனர். ஆகவே நீங்கள் கூறும் அந்த ஏனைய கட்­சி­களும் அமைப்­பு­களும் எமது கொள்­கைக்­கேற்ப இணைந்து செயற்­பட விரும்­பினால்  தாரா­ள­மாக இணைந்து பணி­யாற்­றலாம். அவர்­க­ளுக்­கான கத­வுகள் திறந்தே இருக்­கின்­றன. 

கேள்வி: மலை­ய­கத்­துக்­கான பல்­க­லைக்­க­ழகம் பற்­றிய நகர்­வு­களில் முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளதா?

பதில்: ஆம். அது குறித்து உடன் நட­வ­டிக்­கை­களை எடுக்­கும்­படி ஜனா­தி­ப­தியே உத்­த­ர­விட்­டுள்ளார். கட்­ட­மைப்பு பற்­றிய கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. அதை நாம் கல்­வித்­துறை சார்ந்த குழு­வி­ன­ரி­டமே ஒப்­ப­டைத்­துள்ளோம். ஏனென்றால் இதிலும் அர­சி­யலை புகுத்த சிலர் தயா­ரா­கவே இருக்­கின்­றனர். ஆகவே தான் சுயா­தீ­ன­மா­கவும் இது குறித்த ஒரு ஆரோக்­கி­ய­மான கலந்­து­ரை­யா­டலை ஏற்­ப­டுத்­தவும் எமது அமைச்சு அல்­லாத பொது­வான இடத்தில் முன்னாள் அமைச்சர் பி.பி.தேவராஜ் தலை­மையில் கல்­விக்­கு­ழு­வி­னரை சந்­திக்க ஏற்­பாடு செய்தோம். அதில் அனைத்துத் தரப்­பி­னரும் கலந்து கொண்­டனர். எல்­லோ­ரி­னது கருத்­துக்­க­ளையும் பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொண்டோம். ஆகவே இவ்­வி­டயம் சாத­க­மாக பய­ணிக்­கின்­றது. 

கேள்வி: ஜனா­தி­பதி கோத்­தா­ப­ய­வுக்கு தாமே அதிக வாக்­கு­க­ளைப்­பெற்றுக் கொடுத்­த­தாக சிலர் முக­நூலில் பதி­விட்டு வரு­கின்­றார்­களே?

பதில்: அது மட்­டுமா? தேர்­தலில் வேலை செய்­த­தற்­காக ஜனா­தி­பதி வழங்­கினார் என யாரி­டமோ வாங்­கிப்­பெற்ற வாக­னத்தை ஓட்­டிக்­கொண்டு திரி­கின்­றார்கள் என்றும் எனக்கு முறைப்­பா­டுகள் வந்­தன. இவர்­களைப் போன்­ற­வர்­களை ஜனா­தி­பதி தனது அரு­கி­லேயே எடுப்­ப­தில்லை. நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் இடம்­பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்­டங்­களில் அவர்கள் எங்­கி­ருந்­தார்கள் என்று கேட்டுப் பாருங்கள்? ஐந்து பத்து பேரை தன்­னோடு வைத்­துக்­கொண்டு முக­நூலில் அவர்­களை வைத்து லைக்ஸ் போட்டுக்கொண்டிருப்பவர்களை எல்லாம் மக்கள் அறிந்து வைத்துள்ளார்கள். இவர்கள் எல்லாம் என்றோ மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். நான் இவர்களை கண்டதே இல்லை. நீங்கள் சொல்லித்தான் அறிகிறேன்.

கேள்வி: எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மொட்டு சின்னத்திலா அல்லது தனித்தா போட்டியிடப் போகின்றீர்கள்? 

பதில்:  இன்னும் திகதியே அறிவிக்கப்படவில்லையே. இருந்தாலும் எதில் போட்டியிடுவது என்பது பற்றி நாம் இன்னும் முடிவெடுக்கவில்லை. அதை தேசிய சபையிடம் பொறுப்பு கொடுத்துள்ளோம். எந்த சின்னத்தில் யார்  போட்டியிடுவார்கள் என்பதை அப்போது தான்  நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

கேள்வி: கூட்டணி அமைத்து போட்டியிடும் எண்ணம் உள்ளதா?

பதில்: அதையும் தேசிய சபை தான் முடிவு செய்யும்.  யாராவது வந்து எம்முடன் கதைத்தால் அது குறித்து பார்க்கலாம். அதுவும் நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று காங்கிரஸின் கொள்கைகளோடு ஒத்து போகக் கூடிய அவற்றை ஏற்றுக்கொண்டு எம்முடன் செயற்படக் கூடியவர்களையே நாம் இணைத்துக் கொள்வோம்.

நேர்­காணல் : சிவ­லிங்கம் சிவ­கு­மாரன்

   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22