தமிழ்பேசும் சமூகத்தையும் உள்ளடக்கிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்: மனோகணேசன்

Published By: J.G.Stephan

12 Jan, 2020 | 02:57 PM
image

(நா.தனுஜா)

தமிழ்பேசும் இலங்கைச் சமூகத்தினரை உள்ளடக்கிய ஒருமைப்பாட்டு உணர்வொன்று கட்டியெழுப்பப்படுவதன் மூலம் அனைவரும் இலங்கையர் என்ற சிந்தனை உருவாகும் என முன்னாள் அமைச்சர் மனோகணேசன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

2015 ஆம் ஆண்டிலிருந்து சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மொழியிலும் தேசியகீதம் பாடப்பட்டு வந்த நிலையில், இவ்வருடம் பெப்ரவரி 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திரதின நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசியகீதம் பாடப்படும் என்று அண்மையில் தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

எனினும் அவ்வாறு வெளியான தகவல்களில் எந்தவொரு உண்மையும் இல்லை என்றும், அத்தகைய உத்தியோகபூர்வ முடிவுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்றும் என்றும் அரசதரப்பு மறுப்பு வெளியிட்டிருந்தது.

எனினும் இவ்விவகாரம் குறித்து சமூகவலைத்தளங்களில் தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் பெரும்பான்மையான தமிழ்பேசும் இலங்கையர்கள், தாம் இலங்கை நாட்டிற்கு உரியவர்கள் என்பதால் தேசியகீதத்தை தமிழ்மொழியில் இசைப்பதற்கு விரும்புகின்றார்கள் என்று ஊடகவியலாளரொருவர் அவரது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்தை முன்னாள் அமைச்சர் மனோகணேசன் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06