வடக்கு மாநி­லத்­தினை அபி­வி­ருத்தி செய்ய நிதி­களை விடு­விக்க ஆளுநர் துரித நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்: மாவை..!

Published By: J.G.Stephan

12 Jan, 2020 | 12:19 PM
image

வடக்கு மாகா­ணத்­துக்கென கடந்த ஆட்­சியில் ஒதுக்­கப்­பட்­டுள்ள நிதி­களை விடு­வித்து அபி­வி­ருத்தி மற்றும் வேலை வாய்ப்­புக்­களை துரி­த­மாக்­கவும் மீள்­குடி­யேற்றம் மற்றும் காணி விடு­விப்­புக்­களை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸிடம் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சேனா­தி­ராசா வேண்டுகோள் விடுத்­துள்ளார்.

புதி­தாக பதவியேற்­றுள்ள வடக்கு மாகாண ஆளு­நரை அண்­மையில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யமை தொடர்பில் கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

கடந்த ஆட்சிக் காலத்தில் 30 ஆண்­டுகள் போரினால் பாதிப்­புற்ற வடக்கு மாநி­லத்தின் மீள்­கு­டி­யேற்றம், ஆக்­கி­ர­மிப்­பி­லுள்ள தமிழ் மக்களின் நிலங்கள் விடுவிக்­கப்­பட வேண்­டி­யதன் அவ­சியம், மீள்­கு­டி­யேற எதிர்­பார்த்து வந்­துள்ள மக்­களின் அடிப்­படை வச­திகள், வாழ்­வா­தாரம், குடி­யி­ருப்பு வீடுகள், அதற்கு தேவை­யான நிதி­வச­திகள் பற்றிய கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றது.

மேலும் பலாலி விமான நிலைய அபி­வி­ருத்தி, இளை­ஞர்கள் வேலை­வாய்ப்பு ஏனைய அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கைகள் பற்­றியும் கலந்­து­ரை­யாடப்பட்­டது. முக்­கி­ய­மாக மீள்­கு­டி­யேற்றம், வீடுகள், பாதை அபி­வி­ருத்தி வேலை­வாய்ப்­புக்கு ஒதுக்­கப்­பட்ட நிதி விடு­விக்­கப்­ப­டாமல் முன்­னேற்­றங்கள் தடைப்­பட்­டுள்­ளன. வடக்கு மாநி­லத்­துக்கென இத்­திட்­டங்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்ட வர­வு-­ செ­லவுத் திட்ட நிதி ஒதுக்­கீ­டுகள், விசேட நிதி ஒதுக்­கீ­டுகள் விடு­விக்­கப்­ப­டா­ம­லி­ருப்­பதால் மீண்டும் மக்கள் பெரும் அவ­லங்­க­ளுக்­குள்­ளாகி வரு­கின்­றனர்.

வட­மா­நி­லத்­துக்கு பொறுப்­பாக பத­வி­யேற்­றுள்ள ஆளு­ந­ரான நீங்கள் இப்­பி­ரச்­சி­னை­களைத் தீர்ப்பதற்கு உதவவேண்டும், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தேன். ஆளுநரும் எம்முடன் ஒத்துழைத்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இணக்கம் தெரிவித்தார் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54