மகள் உயிரிழந்தமையை தாங்கிக் கொள்ள முடியாமல் தனக்கு தானே தீ வைத்துக்கொண்ட தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Published By: Digital Desk 4

11 Jan, 2020 | 04:34 PM
image

(தி.சோபிதன்)

காதலனால் ஏமாற்றப்பட்ட மகள் தூக்கில் தொங்கி உயிரிழந்தமையை தாங்கிக் கொள்ள முடியாத தாய் தனக்கு தானே மண்ணெணெய் ஊற்றி எரிகாயத்துக்குள்ளான நிலையில் 4 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் கொக்குவில் கிழக்கை சேர்ந்த மகேஸ்வரன் தபேஸ்வரி(வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காதலனால் ஏமாற்றப்பட்ட மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கடந்த 8 ஆம் திகதி  மீட்கப்பட்டார்.கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் கொக்குவில் கிழக்கை சேர்ந்த  மகேஸ்வரன் கஜானி (வயது 17) என்ற மாணவியே உயிரிழந்தார்.

வன்னிப் பிரதேசத்தில் இருந்து கொக்குவில் பகுதியில் வந்து மீளக்குடியமர்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவி நெடுந்தீவு பகுதியை சேர்ந்த இலைனன் என்பவரை கடந்த 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 8 ஆம் திகதி தாயார் வெளியில் சென்ற நிலையில்  பாட்டியுடன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.  காதலுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவர், நீண்ட நேரமாக அழுது கொண்டு இருந்துள்ளார்.

தொலைபேசி கதைத்துக் கொண்டு சென்ற பேரப் பிள்ளையை காணாத பாட்டி , வீட்டுக்குள் சென்று பார்த்தபோது குளியலறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த திடீர் மரண விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மற்றும் பொலிசார் விசாரணை மேற்கொண்டிருந்த வேளை, மன விரக்தியில் மிகவும் சோகமாக காணப்பட்ட தாயார்  தனது மகள் உயிரிழந்த சோகத்தை தாங்கமுடியாமல் அறையினை பூட்டி விட்டு அவரும் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.

தீயில் எரிவதை  கண்ட யாழ்ப்பாணம் பொலிஸார், அறையின் கதவினை உடைத்து தீயினை கட்டுப்படுத்தியதுடன், உடல் முழுவதும் பலத்த எரி காயங்களுக்கு உள்ளான தாயையும் மீட்டு  அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுமதித்தனர்.

இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02