”ஆறு கோரிக்கைகளில் ஒரு கோரிக்கைக்கே தீர்வு”: பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விசனம் 

Published By: J.G.Stephan

11 Jan, 2020 | 03:24 PM
image

(ஆர்.விதுஷா)

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில், மாணவர் உதவித்தொகையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்குரிய நிதியினை நாளை மறுதினம்  திங்கட்கிழமை வழங்குவதாக அரசாங்கம் வாக்குறுதியளித்திருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைவதாக தெரவித்திருக்கும் ஒன்றிணைந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்   ஒருங்கிணைப்பாளர் ஜின்ன ரத்தன தேரர் தாம் முன்வைத்த ஆறு கோரிக்கைகளில் ஒரு  கோரிக்கைக்கே தீர்வு கிடைத்துள்ளதாகவும் விசனம் தெரிவித்தார்.

மஹாபொல மாணவர் உதவி தொகையை அதிகரிக்க  கோரி  கடந்த வியாழக்கிழமை  ஒன்றிணைந்த  பல்கலைக்கழக  மாணவர் ஒன்றியத்தினர்  ஜனாதிபதி  செயலகத்தற்கு  முன்பாக  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டிருந்தனர்.  இந்நிலையில் அரசாங்கம் அவர்களுடைய பிரச்சினைக்கான  தீர்வைப்  பெற்றுத்தருவதாக கூறியிருந்தது.  இவ்விடயம்  தொடர்பில் அவர்களுடைய  அடுத்த  கட்ட நகர்வு  தொடர்பில்  வினவிய  போதே  தேரர் இதனை  கேசரி  வார  வெளியீட்டிற்கு  தெரிவித்தார். 

 அவர் மேலும் கூறியதாவது  , 

நவம்பர்  மற்றும்  டிசம்பர்  மாத்திற்குரிய   மஹாபொல  புலமைப்பரிசில்   மற்றும் மாணவர்  உதவித்தொகையை  திங்களன்று  பெற்றுத்தருவதாக  அரசாங்க  தரப்பினர்  வாக்குறுதியளித்துள்ளனர். விரிவுரைகளுக்காக 80 வீத வரவினை பூர்த்தி  செய்யாத மாணவர்களுக்கு மஹாபொல நிதியை வழங்குதல், மாணவர் தொகை மற்றும்  மஹா பொல புலமை பரிசில் ஆகியவற்றை சமமான மட்டத்திற்கு கொண்டு வருதல், சப்பிரகமுவ  பல்கலைக்கழகம் தொடர்பான  பிரச்சினைகள் ,   மாணவர்  உதவி  தொகையை  வழங்கும்  போது  கருத்தில் கொள்ளப்படும் பெற்றோரின்  வருமானத்தை வருடாந்தம்  7 இலட்சம் ரூபாய் வரை அதிகரித்தல் உள்ளிட்ட ஆறு  கோரிக்கைகளையே முன்வைத்திருந்தோம். 

இந்நிலையில் , இவ்வரசாங்கத்தின் ஊடாக எமது பிரச்சினைக்கான தீர்வு  கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு கிடைக்கப்பெறாத பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க தயாராவோம் என்றார்.

கடந்த 2010  ஆம் ஆண்டிலிருந்து  மஹா  பொல  உதவித்தொகையை அதிகரிக்குமாறு அப்போதைய அரசாங்கத்திடம்  ஒன்றிணைந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்  கோரிக்கை  விடுத்திருந்தது.

அதற்கு  தீர்வாக  கடந்த  2015  இல்   ஆட்சிக்கு  வந்த   முன்னாள்  ஜனாதிபதி  மைத்திரிபால  சிறிசேன தலைமையிலான  அரசாங்கம் மஹா பொல  உதவி தொகையை  5000  ரூபாவாக  அதிகரித்தது. 

இருப்பினும்  வாழ்க்கைச்செலவு அதிகரித்துள்ள நிலையில் , மஹாபொல  கட்டணத்தை 10, ஆயிரம் ரூபாவாக  அதிகரிக்குமாறு அனைத்து பல்கலைக்கழக  மாணவர்  ஒன்றியம்  கோரிக்கை  முன்வைத்தியருக்கின்றமை   குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08