பெருவின் லிமா நகரிலிருந்து ஆர்ஜென்டீனாவின் புயனொஸ் அயர்ஸுக்கு 23  பயணிகளுடனும் விமான ஊழியர்களுடனும் பயணித்த விமானமொன்று கடுமையாக குலுங்கியதால் அந்த விமானத்தின் 8  ஊழியர்களும் 4  பயணிகளும் காயமடைந்துள்ளனர்.  அவர்களில் இரு  ஊழியர்கள்  தலையில் காயத்துக்கும் கழுத்து எலும்புப்  பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மேற்படி சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று  செய்திகளை வெளியிட்டுள்ளன.

அந்த விமானம் தரையிலிருந்து 41,000  அடி உயரத்தில் பறக்கையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து 80  நிமிடங்கள் கழித்து அந்த விமானம் புயனொஸ் அயர்ஸில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

 

மேற்படி சம்பவத்தில் பயணிகள் காயமெதுவுமின்றி உயிர்தப்பியுள்ளமை ஒரு அதிசய நிகழ்வாக கருதப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.