30 வீத விகி­தா­சாரம் 70 வீத தொகுதி முறை: புதிய தேர்தல் முறைக்கு செல்ல வேண்­டி­யது கட்­டாயமே - கெஹெ­லிய

Published By: J.G.Stephan

11 Jan, 2020 | 10:04 AM
image

(ரொபட் அன்­டனி)

நாட்டில் ஸ்திர­மான அர­சாங்கம் அமைக்­க­வேண்­டு­மானால் 30 வீத விகி­தா­சார மற்றும் 70 வீத தொகுதி முறையில் அமைந்த  தேர்தல் முறைக்கு  கட்­டாயம் செல்­ல ­வேண்டும் என்று  அர­சாங்­கத்தின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான  கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.  

மக்கள் பிர­தி­நி­தித்­து­வங்­களை பெறு­வ­தற்­கான தகு­தியை அடைய  12.5 வீத வாக்­கு­களா அல்­லது 5 வீத வாக்­கு­களா பெற­வேண்டும் என்­ப­த­னை­விட  இவ்­வாறு  விகி­தா­சார மற்றும்  தொகுதி முறையில் அமைந்த  தேர்தல் முறைக்கு செல்­வதே  தற்­போ­தைய  அர­சியல் சூழலில் முக்­கி­ய­மா­ன­தாகும் என்றும்  அவர் குறிப்­பிட்டார்.  

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜே­தாச ராஜ­பக்ஷ கொண்­டு­வந்­துள்ள  21 மற்றும் 22 ஆவது திருத்தச் சட்­ட­மூ­லங்கள்   தொடர்பில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என்­ன­வென்று கேட்­ட­போதே  அர­சாங்­கத்தின் பேச்­சாளர் இந்த விட­யங்­களை குறிப்­பிட்டார்.  

அர­சாங்­கத்தின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான  கெஹெ­லிய ரம்­புக்­வெல இது  தொடர்பில்  மேலும் குறிப்­பி­டு­கையில், 

ஆராய்ந்து பார்க்­கலாம்  
பாரா­ளு­மன்ற உறுப்­பனர் விஜ­ய­தாச ராஜ­பக்ஷ கொண்­டு­வந்­துள்ள   21ஆம் 22 ஆம்  திருத்த சட்ட மூலங்கள் அவ­ரது தனி­நபர் பிரே­ர­ணை­க­ளாகும்.   தனி­நபர் பிரே­ர­ணை­க­ளா­கவே அவற்றை  அவர் கொண்­டு­வந்­துள்ளார். ஆனால்   அவர் கொண்­டு­வந்­தி­ருக்­கின்ற  திருத்த சட்­ட­மூ­லங்­களில்  நாம்  எடுத்­துக்­கொள்­ளக்­கூ­டிய பல விட­யங்கள் இருக்­கின்ற என்­பதை  மறந்­து­வி­டக்­கூ­டாது.  அது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­தலாம் என்ற நிலைப்­பாட்­டி­லேயே நாங்கள் இருக்­கின்றோம். 

கலா­சாரம் மாற­வேண்டும் 
காரணம் இந்த நாட்டில் இன­வாதம், மத­வாதம்,  மற்றும் அடிப்­ப­டை­வா­தத்தின் மூல­மாக   அர­சியல் செய்யும் கலா­சாரம்  மாற­வேண்டும்.  அந்த கலா­சாரம் இருக்கம் வரை  இலங்கை  முன்­னேற்­ற­ம­டை­யாது.  எனவே  அந்த அர­சியல் கலா­சா­ரத்தை மாற்­று­வ­தற்கு நாம்   சில  நட­வ­டிக்­கை­களை எடுத்தே ஆக­வேண்டும்.  ஒரு­கா­லத்தில் இந்த நாட்டின் சிறு­பான்­மை­யின மக்கள் பிர­தான கட்­சி­களில்  பல உயர் நிலைக்கு  ஒரு காலத்தில் வந்­தனர்.  பிர­ப­ல­மான கல்வி அமைச்­ச­ராக  ஒரு­கா­லத்தில் மொஹமட் பதிர்தீன் இருந்தார். அதே­போன்று  வெளி­வி­வ­கரா அமைச்­ச­ராக சிறு­பான்­மை­யி­னத்­த­வ­ரான கதிர்­காமர் செயற்­பட்டார்.

இவ்­வாறு நான் பல  பெயர்­களை கூறிக்­கொண்டு போகலாம். ஆனால் இன்று என்ன நடந்­தி­ருக்­கின்­றது என்று பார்க்­க­வேண்டும். தற்­போது விஜ­ய­தாச ராஜ­பக்ஷ கொண்­டு­வந்­துள்ள 12.5  வீத வாக்கு என்ற அடிப்­ப­டை­தொ­டர்பில்   பலர் பேசு­கின்­றனர். அது தொடர்பில் எம்­மிடம் ஒரு வரை­வி­லக்­கணம் இருக்­கி­றது. 

ஸ்திர அர­சாங்­கத்தை உரு­வாக்­க­லாமா? 
ஆனால் அதற்கு முதல் நான் சில விட­யங்­களை ஆரா­ய­வேண்டி இருக்­கி­றது. அதா­வது இந்த நாட்டில் 1977 ஆம் ஆண்­டுக்குப்  பின்னர்  ஒரே ஒரு தட­வையே ஸ்திர­மான ஒரு அர­சாங்கம் அமைந்­தது. 1989 ஆம் ஆண்டு  கடும் வன்­மு­றை­க­ளுக்கு மத்­தியில்   ஸ்திர­மான ஒரு பாரா­ளு­மன்றம் அமைந்­தது. அதன் பின்னர்   பெரும்­பான்மை பல­முள்ள பாரா­ளு­மன்றம் அமை­ய­வே­யில்லை.  இதற்கு என்ன காரணம் என்று நாம் ஆரா­ய­வேண்டும். ஒரு தேர்­தலில்  வெற்­றி­பெ­று­கின்ற கட்­சி­யினால் ஆட்சி அமைக்க பெரும்­பான்மை பலம் கிடைக்­கா­விடின் அங்கு குறை­பாடு இருக்­கின்­றது என்­பது தெளி­வா­கின்­றது. எனவே நாம் முதலில் இந்த நாட்டில் தேர்தல் முறை­மையை மாற்­றி­ய­மைக்­க­வேண்­டி­யது  கட்­டா­ய­மாகும். 

தினேஷ் குண­வர்த்­தன குழுவின் அறிக்கை 
இது தொடர்பில் தற்­போ­தைய  வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன  முன்னர்    தேர்தல் முறை தொடர்பில் ஆராய்ந்து ஒரு அறிக்­கையை வெளி­யிட்­டி­ருந்தார்.  எனவே  அந்த அறிக்­கையை மீண்டும் களத்­திற்கு கொண்­டு­வ­ர­வேண்­டிய தேவை  ஏற்­பட்­டி­ருப்­ப­தா­கவே  நாங்கள் கரு­து­கின்றோம். அதா­வது  70 வீத தொகுதி முறை­மை­யிலும் 30 வீத  விகி­தா­சார  முறை­மை­யிலும்  அமைந்த தேர்தல் முறை­மைக்கு செல்ல வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். 

அத­னையே தினேஷ்  குண­வர்த்­தன குழு அறிக்­கையில் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது.  அதனால்  தேர்தல்  முறை மாற்­றத்­திற்கு செல்­ல­வேண்டும். இல்­லா­விடின்  எந்­த­வொரு செல்­வாக்­கான கட்­சிக்கும்  ஸ்திர­மான  அர­சாங்­கத்தை அமைப்­பது கடி­ன­மா­கி­விடும்.  அதனால்  தேர்தல் முறை­மையை மாற்­றி­ய­மைக்­க­வேண்டும்.  70 வீத தொகுதி முறைமை இருந்தால் நிச்­ச­ய­மாக  வெற்­றி­பெறும் கட்­சியால் ஸ்திர­மான    அர­சாங்­கத்தை அமைக்க முடியும். எனவே  நாம் முதலில் அது­தொ­டர்­பி­லேயே  ஆரா­ய­வேண்டும்.    மாறாக  12.5 வீதமா,  அல்­லது 5 வீதமா என்­பது குறித்து  ஆராய்ந்­து­கொண்­டி­ருப்­ப­தை­விட   30 வீத விகி­தா­சர முறைமை மற்றும்  70 வீத தொகுதி முறை­மைக்கு அமைந்த  தேர்தல் முறை­மைக்கு செல்­வது அவ­சி­ய­மாக இருக்­கி­றத என்றார். 

விஜே­தா­சவின் பிரே­ரணை என்ன கூறு­கி­றது?

ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி விஜே­தாச ராஜ­பக்ஷ  எம்.பி. கொண்­டு­வந்­துள்ள  21 மற்றும்  22 ஆவது திருத்தச் சட்­ட­மூ­லங்­களி்ல் பல்­வேறு விட­யங்­களில் காணப்­ப­டு­கின்­றன.  அர­சியல் கட்­சிகள்  தேர்தல் ஒன்றில்  மாவட்ட மட்­டத்தில்  12.5 வீத­மான வாக்­கு­களை  பெற்றால் மட்­டுமே  மக்கள் பிர­தி­நி­தித்­து­வங்­களை பெற முடி­யு­மான வகையில்    அர­சி­ய­ல­மைப்பின் 21 ஆவது திருத்த யோசனை  முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. 

உயர்­நீ­தி­மன்ற  மற்றும் மேன்­மு­றை­யீட்டு  நீதி­மன்ற நீதி­ய­ர­சர்கள் நீதி சேவை ஆணைக்­கு­ழுவின்  ஆலோ­ச­னை­யுடன்  ஜனா­தி­ப­தி­யினால்  நிய­மிக்­கப்­ப­ட­வேண்­டு­மென்றும்  சட்­டமா அதிபர்  கணக்­காளர் நாயகம், பொலிஸ்மா அதிபர் மற்றும்   பாரா­ளு­மன்ற பொது­செ­ய­லாளர் ஆகி­யோரை  பிர­த­மரின் ஆலோ­ச­னை­யுடன் ஜனா­தி­ப­தியே நிய­மிக்­க­வேண்டும், பாதுகாப்பு அமைச்சை   ஜனாதிபதியே வகிக்கவேண்டும் என்றவகையில்   அரசியலமைப்பில் 22  ஆவது திருத்த யோசனை   விஜயதாஸ  ராஜபக்ஷவினால்  கொண்டுவரப்பட்டிருக்கின்றது.   இந்த இரண்டு சட்டமூலங்களும்  தனிநபர் பிரேரணைகளாக விஜேதாச ராஜபக்ஷ எம்.பி. யினால் கொண்டுவரப்பட்டுள்ளன.  

தற்போது  காணப்படுகின்ற முறையின் பிரகாரம் 5 வீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டால் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கான தகுதி  ஒரு கட்சிக்கு கிடைக்கின்றது.   அதனையே   12.5 வீதமாக உயர்த்தும் வகையில் 21 ஆவது திருத்த யோசனையை  விஜேதாச ராஜபக்ஷ எம்.பி. முன்வைத்துள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21