பௌர்ணமியில் எதிர்க்கட்சி அலுவலக பணிகளை ஆரம்பித்தார் சஜித் 

Published By: Vishnu

10 Jan, 2020 | 03:35 PM
image

(செ.தேன்மொழி)

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பௌர்ணமி தினமான இன்று மத வழிபாடுகளுடன் எதிர்க்கட்சி அலுவலகத்தின் பணிகளை புத்தாண்டில் ஆரம்பித்தார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சி தலைவராக உத்தியோகப்பூர்வமாக அறிவித்தை அடுத்து எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தை பொறுப்பேற்ற அவர் அதன் ஆரம்பக்கட்ட பணிகளை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்திருந்ததுடன், கங்காரம விகாரதிபதி கிரிந்தே ஹஸ்ரஜித் தேரர் தலைமையில் இந்நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. 

இதன்போது சஜித் பிரேமதாச , அவரது பாரியார்ஜலனி பிரேமதாச  மற்றும் தாயாரான ஹேமா பிரேமதாச ஆகியோர் கலந்துக் கொண்டிருந்ததுடன். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவிகருணாநாயக்க, ஹர்ஷ டி சில்வா , பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா மற்றும் அவரது பாரியார் அனோமா பொன்சேகா , சுஜீவ சேனசிங்க, கயந்த கருணாதிலக, ஹர்சன ராஜகருணா , தலத்தா அத்துகோரல , விஜேகலா மகேஸ்வரன் , ஹரின் பெர்ணான்டோ, அஜித் பி பெரேரா, முஜிபுர் ரஹூமான் , ஏ.எச்.எம். பௌசி உள்ளிட்ட பலரும்  வருகைத்தந்திருந்ததுடன் ,  மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் கொழும்பு நகரசபை மேயர் ரோசி சேனாநாயக்க , திஸ்ஸ அத்தனாயக்க மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலந்துக் கொண்டிருந்தனர்.

கிரிந்தே ஹஸ்கிரிய தேரரின் தலைமையில் பௌத்த ஆராதனை மற்றும் பௌத்த மத போதனைகளும் இடம்பெற்றன. 

இதேவேளை இந்நிகழ்வில் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க , பொதுச் செயலாளர் அக்கிலவிராஜ் காரியவசம் , முன்னாள் பாராளுமன்ற சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல உள்ளிட்டோர் சமூகமளித்திருக்காமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19