ஈரான்- அமெரிக்க பதற்றத்தினால் நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் : மங்கள 

Published By: R. Kalaichelvan

10 Jan, 2020 | 03:29 PM
image

(நா.தனுஜா)

ஈரானில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக எரிபொருள் விலையில் அதிகரிப்பொன்று ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. எனவே ஜனாதிபதி அரசியல் சார்ந்தவர்களை வேட்டையாடுவதில் நேரத்தை செலவிடுவதிலும் பார்க்க பொருளாதாரத்தில் வெகுவாக அவதானம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர வலியுறுத்தியிருக்கிறார்.

அண்மைக்காலமாக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் அதிகரித்திருக்கும் நெருக்கடிநிலையானது எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையுயர்வு ஏற்படக் காரணமாக அமையலாம் என்ற சந்தேகம் தற்போது பெரிதும் எழுந்திருக்கிறது. இத்தகைய பின்னணியிலேயே மங்கள சமரவீர அவரது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

'ஈரானின் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக எரிபெர்ருள் விலையில் அதிகரிப்பொன்று ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இந்தப் புயலை எதிர்கொள்வதற்கு இலங்கை உறுதியானதொரு நிதிக்கொள்கையைப் பேணுவது மிகவும் அவசியமாகும்.

எனவே ஜனாதிபதி அரசியல் சார்ந்தவர்களை வேட்டையாடுவதில் நேரத்தை செலவிடுவதிலும் பார்க்க பொருளாதாரத்தில் வெகுவாக அவதானம் செலுத்த வேண்டும்.

அதுமாத்திரமன்றி எரிபொருள் விலைச்சூத்திரத்தைத் தொடர்ந்து பேணுவதுடன், சரியான பாதையில் பயணிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஈரான் - அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான பதற்றநிலையால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று அரசாங்க ஊடகப்பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40