போரின் விளிம்பில் இருந்து...! 

Published By: Vishnu

10 Jan, 2020 | 02:27 PM
image

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான அண்மைக்கால முரண்நிலை கடந்த புதன்கிழமை ஒரு முழுமையான வட்டத்தைச் சுற்றிவந்தது.

மேஜர் ஜெனரல் காசிம் சுலைமானி கொலைக்கு பதிலடியாக ஈராக்கில் இருக்கும் இரு இராணுவ தளங்களில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்கத் துருப்புக்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. 

அமெரிக்கப் படைகள் மீதான அதன்  முதலாவது நேரடித்தாக்குதல் இதுவாகும். ஈராக்கின் வடபகுதியில் ஈராக்கிய குர்திஷ்தானின் தலைநகரான இர்பிலையும் எல்லையில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேற்கு ஈராக்கின் அல் -- அசாத் நகரையும் இலக்குவைத்தே ஈரான் தாக்குதல்களை  நடத்தியது.

இந்த தாக்குதல்கள் பதிலடியாகவும் ஆற்றலை வெளிக்காட்டும் ஒரு நடவடிக்கையாகவும் அமைந்தது. அவற்றை நியாயப்படுத்துவதற்கு ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஜாவாட் சரீவ் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 51வது சரத்தை சுட்டிக்காட்டினார்.

தாக்குதலுக்குள்ளாகினால், உறுப்புநாடுகள் தற்காப்புக்காக இராணுவத்தாக்குதல்களை நடத்துவதற்கு அந்த சரத்து அனுமதிக்கிறது. " "தற்காப்பில் விகிதாசாரப் பொருத்தமான இராணுவ  நடவடிக்கையை எடுத்த ஈரான் அதை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது" என்று அவர் அறிவித்தார்.இந்த அறிவிப்பை  முரண்நிலையைத் தணிப்பதற்கு ஈரான் இப்போது  தயாராயிருக்கிறது என்று அர்த்தப்படுத்தமுடியும்.

தற்போதைய கொந்தளிப்பான நிலைவரத்துக்கு பிரதான பொறுப்புக்குரியவர் அமெரிக்க ஜனாதிபதி டொனாலாட் ட்ரம்ப்தான். ஈரானின் விசேட குட்ஸ் படைகளுக்கு இரு தசாப்தங்களுக்கும் கூடுதலான காலமாக தலைமைதாங்கிவந்த உயர் இராணுவத் தலைவர் சுலைமானியை ஈராக்கின் தலைநகர் பாக்தாதில் வைத்துக்  கொலைசெய்வதற்கு ட்ரம்ப எடுத்த தீர்மானம் நடைமுறையில் ஒரு போர் நடவடிக்கையேயாகும்.

இஸ்லாமிய ஆட்சி பதிலடி கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது.ஆனால், ஈரானிய இராணுவத் தலைவர்களும் கடும்போக்கு அரசியல்வாதிகளும் பரந்தளவில் எச்சரிக்கைகளை விடுத்தபோதிலும், மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தாக்குதல் ஒன்றையே தெஹ்ரான் தொடுத்தது.

தாக்குதலில் அமெரிக்க தரப்பில் எவரும் கொல்லப்படவில்லை என்றும் மிகவும் குறைந்தளவு சேதம் மாத்திரமே ஏற்பட்டது என்றும் பென்டகனின் மதிப்பீடுகள் கூறின. 

புதன்கிழமை வெள்ளைமாளிகையில் இருந்து வெளியிட்ட அறிவிப்பில் ஜனாதிபதி ட்ரம்ப் ஈரானுடன் மேலும் மோதல்களில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்வதாக சமிக்ஞையைக் காட்டினார்.

ஈரானுக்குள் அமெரிக்கா விமானக்குண்டு வீச்சுக்களை அல்லது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருந்தால், ஈரானிடமிருந்து மேலும் தாக்குதல்களை தூண்டிவிட்டிருக்கும். அதன் விளைவாக தொடர்ச்சியான வன்முறைகளுக்கும்  ஆக்கிரமிப்புக்குமான   சூழ்நிலை தோன்றியிருக்கும். 

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நேரடி மோதல்கள் மூளுமேயானால் அது மேற்காசியா முழுவதற்குமே பேரிடராக அமையும். அமெரிக்காவின் பாரம்பரிய இராணுவ வல்லமையுடன் ஒப்பிடும்போது ஈரான் பலவீனமான ஒரு நாடாக இருக்கலாம். ஆனால், அது வல்லமைமிக்க ஒரு எதிரியாகும். 

ஈரானிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளும் நீண்டதூரவீச்சு ரொக்கெட்டுக்களும் மாத்திரமல்ல, மேற்காசிய பிராந்தியம் பூராவும் அதன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்ற பெருமளவு திரட்டல் படைகளும் இருக்கின்றன. ஈரான் மீது படையெடுப்பொன்றை அல்லது அதன் பிராந்தியங்கள் மீது விமானத்தாக்குதல்களை நடத்துவது என்பது அமெரிக்காவுக்கும் அதன் நேச நாடுகளுக்கும் மிகவும் பெருமளவு இழப்புகளை ஏற்படுத்தும். 

வளைகுடாவில் கடல்வழிகைளை தாக்குவதன் மூலமாக உலகளாவிய எண்ணெய் விநியோகத்சை் சீர்குலைக்கவும் ஈரானால் முடியும்.எந்த மதிப்பீட்டின்படி நோக்கினாலும் நேரடிப்போர் ஒன்று பெரிய அனர்த்தத்தையே கொண்டுவந்திருக்கும்.

ஈரான் மீது மேலும் தாக்குதல்களை மேற்கொள்வதை தவிர்ப்பதாக அறிவித்ததன் மூலமாக நல்லதொரு காரியத்தைச் செய்திருக்கிறார் ; மேற்காசியாவை  வன்முறைகள் மற்றும்  பேரழிவுக்குள் தள்ளிவிடுவதை தவிர்த்திருக்கிறார். நெருக்கடிக்கு இராஜதந்திர இணக்கத்தீர்வு ஒன்றை காண்பதறகு  சர்வதேச சமூகம் இப்போது முயற்சிக்கவேண்டும்.

வளைகுடாவில் நீண்டகால அமைதியைக் கொண்டுவரக்கூடிய அணு உடன்படிக்கைக்கு  புத்துயிர் கொடுப்பதற்கான  வழிவகைகளைக் கண்டறிய வேண்டும்.அதேவேளை, முரண்நிலையைத் தணிப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தை ஈரானும் பயன்படுத்திக்கொள்ள வேண்டம். 

( த இந்து )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13