கரைதுறைப்பற்று பிரதேச சபையின்  அனுமதியுடன், தனியார் நிறுவனத்தால் சட்ட விரோத மண் அகழ்வு !

Published By: Digital Desk 3

10 Jan, 2020 | 02:54 PM
image

முல்லைத்தீவு - முள்ளியவளை கயட்டைக்காட்டுப் பகுதியில், பிரதேச சபையால் கொட்டப்படும் கழிவுப் பொருட்களை புதைக்கின்றோம் என்ற பெயரில், கரைதுறைப்பற்று பிரதேசசபைத் தவிசாளரின் அனுமதியுடன் சட்டவிரோத மண்ணகழ்வுச் செயற்பாடு நேற்று (09.01.2020) இடம்பெற்றது.

குறித்த சட்டவிரோத செயற்பாட்டினை, வனவளத்திணைக்களத்தினர் தலையீடு செய்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,

வனவளத் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட குறித்த முள்ளியவளை கயட்டைக்காட்டுப் பகுதியில், வனவளத்திணைக்களத்தின் அனுமதியுடன், கரைதுறைப்பற்று பிரதேசசபையினர் கழிவுப் பொருட்களை கொட்டி வந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் பிரதேசசபையினரால், மிகவும் பாரிய அளவிலும், முறையற்றவகையிலும் கழிவுகள் கொட்டப்பட்டு காணப்படுகின்றன.

இவ்வாறு கொட்டப்பட்டுள்ள கழிவுப்பொருட்களை புதைப்பதற்கான பணியினை கரைதுறைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர், வனவளத் திணைக்களத்தினரின் அனுமதியினைப் பெறாது, முல்லைத்தீவில் இயங்கும் 'அவலோன் ' என்னும் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கியுள்ளார்.

குறித்த 'அவலோன்' என்னும் தனியார் நிறுவனத்தினர், கழிவுப் பொருட்களை புதைப்பதற்கான குழிகள் வெட்டுப்படுகின்றது என்ற பெயரில், சட்டத்திற்கு முரணான வகையில், உரிய  திணைக்களத்தினரின் அனுமதி பெறாது மண் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர்.

குப்பைகளை மூடுவதாக தெரிவித்து அகழப்பட்ட பாரிய குழிகளினால் அருகில் இருந்த பல மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதோடு அகழப்படும் மண் குறித்த தனியார் நிறுவனத்தின் தேவைக்கும் கொண்டு செல்லப்பட்டது .

இதனை அறிந்த வன வளத் திணைக்களத்தினர், தமது ஆளுகைக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி குறித்த சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைதுசெய்ததுடன், மண் அகழ்விற்காக பயன்படுத்திய வாகனத்தினையும் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் அறிந்து அவ்விடத்துக்கு வருகை தந்த முல்லைத்தீவு அபிவிருத்திக்குழுவின் தலைவர் சதாசிவம் கனகரத்தினம் அகழ்வு நடவடிக்கைகளை பார்வையிட்டார். இந்த அகழ்வு நடவடிக்கை பிரதேச சபையின் அனுமதியுடனே இடம்பெறுவதாகவும் இங்கே கொட்டிடப்படும் கழிவுகளை புதைக்க பிரதேச சபையால் முடியாது எனவும் அதனாலேயே இந்த தனியார் நிறுவனம் சமூக சேவை செய்வதாகவும்   குறித்த மண் அகழ்வு நல்ல நோக்கத்துக்காக செய்யப்படுவதால் உரிய திணைக்களங்களின் அனுமதி தேவையில்லை எனவும் வியாபார தேவைகளுக்கு மட்டுமே அகழ்வு செய்தால் உரிய திணைக்களங்களின் அனுமதி தேவை எனவும் தெரிவித்து மண் அகழப்படுவதை எவரையும் இடையூறு செய்யவேண்டாம் என தெரிவித்தார் .

அத்தோடு தம்மால் பிரதேசசபைக்கு, கழிவுப்பொருட்கள் கொட்டுவதற்கான அனுமதி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும், குறித்த தமது பகுதிக்குள் மண் அகழ்வதற்கான எவ்வித அனுமதிகளும் தம்மால் வழங்கப்படவில்லை என வனவளத்திணைக்கள அதிகாரியால் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இது தொடர்பில் கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளர் க.தவராசா கருத்துத் தெரிவிக்கையில்,

கழிவுப் பொருட்களை புதைப்பதற்காக குழிகள் வெட்டப்பட்டதாகவும், அவ்வாறு வெட்டப்பட்ட குழிகளில் இருந்து பெறப்பட்ட மண்ணினை பிரதேசசபையின் தேவைக்காகவே பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

குறித்த செயற்பாட்டிற்கு தம்மால் வனவளத் திணைக்களத்திடம் எவ்வித அனுமதியையும் பெறவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:28:20
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27