சிறிய , நடுத்தர  வர்த்தக  சமூகத்தை ஊக்குவிக்க கடன் நிவாரணத்திட்டம்

Published By: R. Kalaichelvan

09 Jan, 2020 | 07:56 PM
image

( ஆர்.விதுஷா )

நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் சிறிய , நடுத்தர வர்த்தக சமூகத்தின் முழுமையான ஒத்துழைப்பை பெறும் நோக்கில் அவர்களை ஊக்குவிக்கும் முகமாக கடன்  நிவாரணத்திட்டமொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருப்பதாக அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன்  திட்டங்கள் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

 

நிதி அமைச்சில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்த அவர் மேலும்  கூறியதாவது  ,  

பொருளாதார வளர்ச்சியில் சிறிய நடுத்தர வர்த்தகர்களின் பங்களிப்பு அவசியமானதாகும். ஜனாதிபதி கோத்தாபயராஜபக்ஷவின் தேர்தல்  விஞ்ஞாபனத்திலும் பொருளாதார வளர்ச்சி தொடர்பிலான திட்டங்கள்  காணப்படுகின்றன.

ஆகவே ,அதனை மையமாக கொண்டு சில சிறிய நடுத்தர வர்த்தகர்களை பாதுகாப்பது மாத்திரமல்லாது அவர்களை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளது.

பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக நாடு பின்னடைவைச்  சந்திக்க  நேரிட்டுள்ளது. அதிலிருந்து மீண்டு பொருளாதார வளர்ச்சியை  6.5வீதத்தினால்  அதிகரிப்பதே இந்த அரசாங்கத்தின்  இலக்காகும். அதனை  கருத்தில் கொண்டு சிறிய நடுத்தர வர்தகர்களுக்கு கடன் நிவாரண திட்டத்தை  முன்னெடுக்கவுள்ளோம்.  

கடந்த 5 வருடங்களில் அரசாங்கத்தினால் முறையான வரிக்கொள்கையொன்று வகுக்கப்படவில்லை.

அதனால் சிறிய ,நடுத்தர வர்த்தகர்கள் பாதிப்புக்குள்ளாகினர். அதேபோல்  கடந்த அரசாங்கத்தினால் சிறிய நடுத்தர வர்த்தகர்களை பாதுகாத்து அவர்களுடைய பங்களிப்புடன் பொருளாதாரத்தில் வளர்ச்சியை  ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் எதுவும் வகுக்கப்படவில்லை.

சிறிய , நடுத்தரவர்த்தகர்களில் கடனை மீள செலுத்த இயலாமல் போன  தரப்பினர் மற்றும் கடனை இயன்ற அளவு செலுத்தி வரும் தரப்பினரை   முன்னிலைப்படுத்தி அவர்களை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்கள்  வகுக்கப்பட்டுள்ளன. அதற்காக கடன் நிவாரணத்திட்டமொன்றை  அரசாங்கம் உருவாக்கியுள்ளது. 

கடன் தொகையை செலுத்துவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதுடன், அதன் போதான வட்டியை நீக்குவதற்கான  நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.  

அதேபோல்  , அதற்கு மேலதிகமாக 300 மில்லியன் ரூபாய் கடன் வசதி  திட்டமொன்றையும்  அறிமுகப்படுத்தியுள்ளோம். அவ்வாறு கடன் தொகையை பெற்றுக்கொள்வோர் நம்பகரமான முறையில் செயற்பட  வேண்டியது அவசியமானதாகும்.

 5 வருட தவணைக்காலமாகவே இந்த கடன் தொகை வழங்கப்படவுள்ளது. இத்தொகை  மூலம் தனியான பாவனைக்கென வாகனங்களை கொள்வனவு  செய்ய முடியாது. சிறிய நடுத்தரவ ர்தகர்களுக்கே  இந்த சலுகை  வழங்கப்படும். 

2வீதத்தினால்  வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதாரத்தை முன்னோக்கிய பாதையில் இட்டு செல்வதே இதன் நோக்காகும்.

இந்த கடன் சலுகையை அவர்களுடைய ஊக்குவிப்புக்காக அரசாங்கம் வழங்குவதனால்  அவர்கள்  பொறுப்புடன் செயற்படவேண்டியது  அவசியமானதாகும். அவர்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையின்  கால  அளவு ஜீலை மாதம் 30  திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சிறிய நடுத்தர வர்தகரொருவர் பெற்றுக்கொண்ட கடன் தொகையில் 50 வீதத்தை செலுத்தி முடித்தவராயின் அவருக்கு  50 வீத  கடன் சலுகையை  வழங்கவும் தீர்மானித்துள்ளோம்.

அதேபோல் 50 வீத கடனையேனும் திருப்பிச் செலுத்த இயலாதவர்களுக்காக வட்டி வீதத்தில் 25 வீத சலுகையை வழங்கவும் அரசாங்கம்  தீர்மானித்துள்ளது.

வீழ்ச்சி கண்ட அவர்களது வியாபாரத்தை மீண்டும் ஆரம்பித்து அதன் ஊடாக 6.5 வீத பொருளாதார வளர்ச்சியை அடைவதே இதன்  நோக்காகும். அதேபோல் அவர்களுக்கான செயற்பாட்டு மூலதனத்தை பெற்றுக்கொடுப்பத்ற்கான நடவடிக்கைகளை யும் முன்னெடுத்துள்ளோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51