பங்களாதேஷில் இந்து மதகுரு படுகொலை

Published By: Raam

08 Jun, 2016 | 08:31 AM
image

பங்களாதேஷில்  இந்து  மதகுரு ஒருவர்   தீவிரவாத சந்தேக நபர்களால்  கொல்லப்பட்டதையடுத்து அந்நாட்டில் பெரும் பதற்றநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்கு ஜெனெய்டாஹ் பிராந்தியத்திலுள்ள ஆலயத்துக்கு அருகில் ஆனந்த கோபால் கங்குலி என்ற மேற்படி 70  வயது மதகுருவின் சடலம் காணப்பட்டது.

அவரது தலையானது கழுத்திலிருந்து கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

அவர் இரு நாட்களில் இத்தகைய மதவாத தாக்குதலில் பலியான மூன்றாவது நபராக விளங்குகிறார்.

இந்நிலையில் இந்த மதவாத படுகொலைகள் தொடர்பில்   பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையொன்றின் போது 3  சந்தேகநபர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

டாக்கா நகரிலுள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ்  அமைப்பைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதன்போது அடையாளம்  தெரியாத துப்பாக்கிதாரிகள் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொணடதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேசமயம் மூன்றாவது சந்தேகநபர் மேற்கு ரஷாகி மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பங்களாதேஷில் அண்மையில் இடம்பெற்ற மதவாத படுகொலைகளுக்கு தாமே காரணம் என ஐ.எஸ். தீவிரவாதிகள்  உரிமைகோரியுள்ள நிலையில் அதனை பங்களாதேஷ் அரசாங்கம் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தமது  நாட்டில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இல்லை என அந்த அரசாங்கம் வாதிட்டு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35