தற்போதைய சூழலை கருத்திற் கொண்டு அச்சுறுத்தலான ஒப்பந்தங்களை இரத்து செய்யுமாறு ஜே.வி.பி. கோரிக்கை

Published By: Vishnu

09 Jan, 2020 | 05:11 PM
image

மத்தியகிழக்கு நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான  முரண்பாடுகளுக்கு இலங்கை பங்குதார நாடாக வேண்டிய அவசியம் கிடையாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.    

அத்துடன் தற்போதைய சூழலை கருத்திற்கொண்டு அச்சுறுத்தலான  ஒப்பந்தங்களை உடனடியாக இரத்து செய்யுமாறு மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க ஜனாதிபதி கோத்தாய ராஜபக்ஷவிடம் எழுத்து மூல கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான முரண்பாடு தற்போது உக்கிரமடைந்துள்ளது. இதனால் இலங்கையின் பாதுகாப்பிற்கும்      பாதிப்பு ஏற்படும் சாத்தியம் காணப்படுகின்றன. 

எகஷர், சோபா ஆகிய இரு  ஒப்பந்தங்களை  இலங்கை  அரசாங்கம்  அமெரிக்காவுடன் கைச்சாத்திட்டுள்ளது. சோபா ஒப்பந்தத்தின் ஊடாக   அமெரிக்காவின் யுத்த  நடவடிக்கைகளுக்கு தேவையான      சேவைகள்  பெற்றுக்கொடுக்க வேண்டும். அதன் பிரகாரம்   இலங்கையின் துறைமுகம், விமான நிலையம், கணியயெண்ணய்  மற்றும் தொலைத்தொடர்பு தகவல்கள் உள்ளிட்ட  வசதிகளை    இலங்கை பெற்றுக் கொடுக்க ஒப்பந்தத்தின் பிரககாரம் கடமைப்பட்டுள்ளது.

ஈரானுக்கும்  அமெரிக்காவிற்கும் இடையிலான   முறுகல் நிலை   ஈரானிய படைத்தளபதியின் இறப்பினை தொடர்ந்து  உக்கிரமடைந்துள்ளது. 2014ம் ஆண்டு  ஈரர்னுடன்   அமெரிக்கா  செய்துக் கொண்ட  சோபா ஒப்பந்தம்  ஊடாக  பெற்றுக் கொண்ட அதிகாரங்களும் மூல  காரணியாக காணப்படுகின்றது.   அமெரிக்க  படையினர்  ஈரானில்   நிலைக் கொண்டமையினால் பல விளைவுகள் அங்கு   இந்த ஒப்பந்தத்தின் ஊடாக பெற்றுக் கொண்ட அதிகாரத்திற்கு அமைய தோற்றம் பெற்றுள்ளன.

இவ்வாறான நிலையில் சோபா ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளமையினால் பல நாடுகள் இன்று பாரிய சவால்களை எதிர்க் கொண்டுள்ளன. அமெரிக்காவின்  பலவந்தத்தினால் நாடுகளின் சுயாதீனத்தன்மை  இல்லாதொழிக்கப்பட்டுள்ளமையும் அவதானிக்க முடிகின்றது.   இந்த   தாக்குதலின் பின்னர் ஈரானிய  பாராளுமன்றம் அமெரிக்க  படைகளை வெளியேறுமாறு குறிப்பிட்டும் அமெரிக்கா  இதுவரையில் அவர்களின்  தீர்மானத்தை  ஏற்றுக் கொள்ளவில்லை.  இதற்கு மாறாக  அமெரிக்கா  ஈரானுக்கு  பொருளாதார தடை விதிப்பதாகவும் எச்சரித்துள்ளது.

மத்திய நாடுகளின் போட்டித்தன்மையினால் இலங்கையும் அவர்களின்  யுத்த  பங்குதார நாடாகும் நிலை ஏற்படும்.இதனால் இலங்கையின் தேசிய   பாதுகாப்பிற்கு;,    இறையான்மைக்கும்  பாரிய    அச்சுறுத்தல் ஏற்படும்.  2007ம் ஆண்டு  கொண்டு வரப்பட்ட  சோபா ஒப்பந்தம்  2017ம் ஆண்டு மறுசீரமைக்கப்பட்டு நீடிக்கப்பட்டுள்ளது.  ஆகவே     எமது நாட்டுக்கு  அச்சுறுத்தலாக உள்ள ஒப்பந்தங்களை  ஜனாதிபதி இரத்து செய்ய வேண்டும்.

தேர்தலை இலக்காகக் கொண்டு மக்கள் விடுதலை முன்னணியினர் இந்த கோரிக்கையினை விடுக்கவில்லை.   பாதுகாப்பு தொடர்பான அனுபவம்  பாதுகாப்பு செயலாளர் என்ற ரீதியில்  ஜனாதிபதியாகிய  உங்களால் புரிந்துக் கொள்ள முடியும். இவ்விடயத்தில் அரசியல் ரீதியில் தீர்மானங்களை மேற்கொள்ள மாட்டிர்கள் என்று  எதிர்பார்க்கின்றறோம் என்றும் அந்த கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38