நிர்பயாவின் தாயாரிடம் மகனுக்காக மடி பிச்சை கேட்ட குற்றவாளியின் தாய்

Published By: Daya

09 Jan, 2020 | 03:02 PM
image

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு எதிர்வரும்  22ஆம் திகதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப் படும் என டில்லி உச்சநீதிமன்றம் அறிவித்ததையடுத்து நிர்பயா தாயாரிடம் மகனுக்காக குற்றவாளியின் தாய் மடி பிச்சை கேட்ட சம்பவம் டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

டில்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 16ஆம் திகதி வைத்திய மாணவி ஒருவர் ஓடும் பஸ்ஸில் 6 பேரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது.  இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரை டில்லி பொலிஸார் கைது செய்தனர்.

ஆறு பேரில் ஒருவர் சிறார் என்பதால் அவர் சிறார் சீர்திருத்தப் பாடசாலையில் அடைக்கப்பட்டார். மீதமுள்ள 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், டில்லி திகார் சிறைக்குள் தற்கொலை செய்து கொண்டார்.

சிறையில் அடைக்கப்பட்ட மற்ற 4 பேரும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றில் முறையிட்டனர். 

குறித்த நீதிமன்றம் 4 பேரின் தூக்கு தண்டனையை உறுதிசெய்தது.

இந்நிலையில், நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு எதிர்வரும்  22ஆம் திகதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டில்லி உச்சநீதிமன்றம்  அறிவித்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து 4 பேரையும் தூக்கிலிட இன்னும் 2 வாரங்களே இருப்பதால் அதற்கு முந்தைய நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதன் ஒரு பகுதியாக திகார் சிறைச்சாலையில் தூக்கில் இடுவதற்கான ஒத்திகை நடைபெற்றது.

நிர்பயா கொலை குற்றவாளிகள்.

இந்நிலையில், தீர்ப்பிற்கு முன், உயிரிழந்த நிர்பயாவின் தாயார் ஆஷா தேவியிடம், குற்றவாளிகளுள் ஒருவரான, முகேஷ் சிங்கின் தாயார் என் மகனை எனக்கு திருப்பி அளியுங்கள் என்றும், மகனுக்கு உயிர்பிச்சை போடும் படி நிர்பயா தாயாரிடம் சேலையை பிடித்து மடிப்பிச்சை கேட்டுள்ளார். 

ஆனால் இதனை மறுத்த ஆஷா தேவி, மகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு  நீதிக்காக தாம் கடந்த 7 ஆண்டுகளாக காத்திருப்பாதாக தெரிவித்தார் இந்த சம்பவம் டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17