(க.கிஷாந்தன்)

தலவாக்கலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் நபரொருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 அட்டன் நுவரெலியா ஏ - 7 பிரதான வீதியில் தலவாக்கலை மெதடிஸ்ட் கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் கொட்டகலை பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலொன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டர் சைக்கிளை செலுத்திய நபரே இவ்வாறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

 குறித்த விபத்து இன்று (07) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதோடு மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.