போலி செய்தி சட்டத்திற்கு எதிராக வழக்கு  தொடுத்துள்ள எஸ்.டி.பி

09 Jan, 2020 | 11:58 AM
image

சிங்கப்பூரில் மூன்று மாதங்களுக்கு முன்பு நடைமுறைக்கு வந்த போலி செய்தி சட்டத்திற்கு  எதிராக  சிங்கப்பூரின் எதிர்க்கட்சி(எஸ்.டி.பி) முதல் முறையாக வழக்கு தொடுத்துள்ளது. 

போலி செய்தி சட்டத்திற்கு  அமைய இணையத்தளத்தில் வெளியிடும் பதிவுகளின் திருத்தங்களை இணைக்கும்படி அரசாங்கம் விடுத்துள்ள உத்தரவினை இரத்துச் செய்யுமாறு கோரி நீதிமன்றத்தில் எதிர்க்கட்சி மனு தாக்கல் செய்துள்ளது. 

இணையத்தளத்தில்  வெளியடப்பட்ட கட்டுரை மற்றும் அது தொடர்பிலான பேஸ்புக் பதிவுகளை அகற்றுமாறு  ஜனநாயகக் கட்சியின் (எஸ்.டி.பி) கோரிக்கையை மனிதவள அமைச்சகம்  மறுத்ததையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஜனவரி 16 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று பாராளுமன்றத்தில் தற்போதைய பிரதிநிதித்துவம் இல்லாத ஜனநாயகக் கட்சி புதன்கிழமை மாலை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தவறான அல்லது போலி செய்திகளை பதியவிடுவோருக்கு அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கும் புதிய சட்டம் ஒன்றை 2019 ஆண்டு ஒக்டோபர் மாதம் சிங்கப்பூர் அரசு அமுல் படுத்தியது. இதன் மூலம் தவறான செய்திகளை பரப்புவது சட்டவிரோதம் ஆக்கப்பட்டது. எனினும் இச் சட்டத்திற்கு எதிராக, கூகுள், டுட்விட்டர் மற்றும் சிங்கப்பூர்  நாட்டின் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47