பால்கனியில் தனித்து விடப்பட்ட 7 மாத குழந்தை குளிரில் உறைந்து உயிரிழப்பு

Published By: Digital Desk 3

09 Jan, 2020 | 11:19 AM
image

ரஷ்யாவின் கடும் பனியில் வீட்டின் பால்கனியில் தனித்து விடப்பட்ட 7 மாத குழந்தை குளிரில் உறைந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ரஷ்யாவின்  கிழக்கு ஹபார்வ்ஸ்க் பிராந்தியத்தில் -7 டிகிரி செல்ஸியஸ் குளிரில், 7 மாத குழந்தையை, 5 மணிநேரத்திற்கு பால்கனியில் தனியே விட்டு சென்ற பெற்றோர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வகுகின்றனர்.

நல்ல காற்றை சுவாசிக்க வீட்டில் உள்ள பால்கனியில் குழந்தையை அதன் சிறிய தள்ளுவண்டியில் பெற்றோர் அமரவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் குழந்தை தாழ்வெப்பநிலை நோயால் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.  தாழ்வெப்பநிலை ( hypothermia) என்பது  ஒரு மருத்துவ அவசரநிலை, இதில் உடல் வெப்பநிலையை மீட்டெடுக்க இயலாது, ஏனெனில் வெப்பநிலை மிக விரைவாக குறைகிறது. இந்த நிலை உங்கள் உடல் வெப்பநிலை 35 ° C க்கும் குறைவான வெப்பநிலையை எட்டச் செய்கிறது. உங்கள் உடல் வெப்பநிலை மிகக் குறைவாக இருக்கும்போது, உங்கள் இதயம், நரம்பு மண்டலம் மற்றும் பிற உறுப்புகள் உகந்ததாக இயங்க முடியாது. உடனடியாக உதவி செய்யாவிட்டால், தாழ்வெப்பநிலை இதயம் மற்றும் சுவாச மண்டலத்தின் செயல்பாட்டில் மொத்த தோல்வியை ஏற்படுத்தி இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும்.

குறித்து சம்பவம், அந்த பிராந்தியத்தின் சுகாதார துறை அமைச்சர் கூறுகையில் ''இங்கு நிலவும் கடும் குளிரினால் யாரையும் தனியே விடுவது ஆபத்து. குறைந்த பட்ச வெப்பநிலையால், குழந்தைகள் விரைவில் பாதிக்கப்படுவார்கள், அதனால் எப்போதும் குழந்தைகள் கண்காணிக்கப்படவேண்டும் '' என்றும் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41