சிங்கப்பூர் சட்டம், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

Published By: Digital Desk 4

08 Jan, 2020 | 05:19 PM
image

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தார். 

ஜனாதிபதியும் அமைச்சர் சண்முகமும் இருநாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற  க்கலந்துரையாடல் முக்கியமாக வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டிருந்தது.

பயங்கரவாதத்தை எதிர்கொள்வது, இணையப் பாதுகாப்பு, தீவிரவாதத்தை கட்டுப்படுத்துதல், வெளிநாட்டு அழுத்தங்கள் மற்றும் தலையீடுகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் புலனாய்வுத்துறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

வெறுப்புப் பேச்சு, இணைய வழியாக தவறான தகவல்களை பரப்புதல் ஆகியவற்றிற்கு தீர்வு காணுதல் மற்றும் சமய நல்லிணக்கத்தை பேணுதல் தொடர்பாக சிங்கப்பூர் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சட்டங்கள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர். 

வர்த்தக அபிவிருத்தி, செயற்பாடு மற்றும் ஊக்குவிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த தரவு முகாமைத்துவத்தை வர்த்தகத் துறைகள் அதிகளவில் நம்பியிருக்கும் சமூக ஊடக புலனாய்வு மாதிரிகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. டிஜிட்டல் மற்றும் ஆளடையாளத் தரவுகள் (பயோமெட்ரிக்) ஆகிய இரு துறைகளையும் இணைக்கும் மறுக்கமுடியாத அடையாளமாக சிங்கப்பூர் தற்போது ஆராய்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

இந்த சுமுகமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  அமைச்சர் சண்முகத்திற்கு ஜனாதிபதி அலுவலகத்தில் பகற் போசன விருந்தளித்தார். அதன் பின்னர் அமைச்சர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50