உங்களுக்கு தெரியுமா ? பேஸ்புக் கணக்கை பாதுகாக்க 4 புதிய வழிகள்

Published By: Digital Desk 3

08 Jan, 2020 | 05:29 PM
image

பேஸ்புக் பயனர்கள் தங்களின் கணக்கின்  பாதுகாப்பை மேம்படுத்தவும், அவர்களின் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கட்டுப்படுத்தவும் புதிதாக நான்கு அம்சங்கள் இணைக்கப்பட்டு, தனியுரிமை அமைப்புகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பேஸ்புக், இன்று உலகில் சுமார் 2.47 பில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ளது.

இதில், 2014 இல் பேஸ்புக் பயனாளர்களுக்கான தனியுரிமை அமைப்புகள் (Privacy Checkup tool) அறிமுகப்படுத்தப்பட்டன.

இதை இன்னும் மேம்படுத்திய வெர்ஷன் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், "நீங்கள் பதிவிடுவதை யார் பார்க்க முடியும்?"(Who can see your post?) என்கிற விருப்பத்தேர்வின் மூலம், உங்கள் கணக்கில் இருக்கும் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் போன்ற சுய விபர தகவல்கள் மற்றும் கணக்கில் பதிவிடப்பட்டுள்ள பதிவுகளை யார் பார்க்க முடியும் என்பதை பயன்பட்டாளர்கள் இன்னும் தெளிவாகப் பார்க்கவும் மாற்றவும் முடியும்.

"உங்கள் கணக்கை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது?" ("How to Keep Your Account Secure") என்ற அம்சத்தின்மூலம் வலுவான கடவுச்சொல் அமைக்கவும், புது சாதனங்களிருந்து உள்நுழையும்போது எச்சரிக்கை பெறவும் முடியும்.

"ஏனையோர், உங்களை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள்" ("How People Can Find You") என்ற அம்சத்தின் மூலம், முகநூலில் ஏனையோர் உங்களை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள் என்றும், உங்களுக்கு யார் ரிக்வெஸ்ட் அனுப்பமுடியும் என்பதையும் புதிய அப்டேட்டில் பயனாளர்களினால் மாற்றியமைக்க முடியும்.

மேலும், "பேஸ்புக்கில் உள்ள தரவு அமைப்புகள் (Data Settings), பேஸ்புக் இணைக்கப்பட்டுள்ள செயலிகளிலிருந்து பகிரப்படுகிற பதிவுகளை நிர்வகிக்க உதவுவதுடன், இணைக்கப்பட்டு பயன்படுத்தப்படாத செயலிகளை அகற்றவும் பயன்படும்" என பேஸ்புக் கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26