இன்று உலகை உலுக்கியுள்ள 3 முக்கிய பதிவுகள் !

Published By: Vishnu

08 Jan, 2020 | 01:28 PM
image

அமெரிக்காவுக்கு ஈரானின் பதிலடி

அமெரிக்காவின் வான் வழித் தாக்குதல் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்த ஈரானிய புரட்சிகர காவல் படைப் பிரிவின் தலைவரான ஜெனரல் குவாசிம் சொலைமானி கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கும் வகையில் ஈராக்கில் உள்ள அமெரிக்க இரு இராணுவத் தளம் மீது ஈரான் 22 ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதல் காரணமாக 80 அமெரிக்க படையினர் உயிரிழந்ததாகவும், அவர்களின் ஹெலிகொப்டர்கள், ட்ரோன் விமானங்கள் சோதமடைந்துள்ளதாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஈரான் விமான விபத்து

ஈரான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 176 பேருடன் புறப்பட்ட உக்ரேன் நாட்டுக்கு சொந்தமான போயிங் 737 மெக்ஸ் ரக விமானம் விபத்துக்குள்ளது.

இந்த விபத்தின் காரணமாக அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

ஈரானின் தெஹ்ரான் இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உக்ரேன் தலைநகர் கீவ் நோக்கி புறப்பட்ட விமானமே சிறிது நேரத்தில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின்போது 170 பயணிகளும், 10 பணியாளர்களும் பயணித்தாக ஈரானிய ஊடகங்கள் ஆரம்பத்தில் தெரிவித்திருந்த எனினும் அதன் பின்னர் 167 பயணிகளும், 9 பணியாளர்களும் விமானத்தில் இருந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

விமானத்தின் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டபோது விமானியின் கட்டுப்பாட்டை விமானம் இழந்தமையினாலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த ஈரானிய போக்குவரத்து அமைச்சகம் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளது.

எவ்வாறெறினும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குழுவொன்று விபத்து நடந்த இடத்தில் உள்ளதுடன், விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்க்கும் நடவடிக்கையில்  மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அவுஸ்திரேலிய காட்டுத் தீ

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இருந்து வரும் புகை பசுபிக் முழுவதம் பரவியுள்ள நிலையில் தென் அமெரிக்காவை நோக்கி நகர்வதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச வானிலை அறிவிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த புகை மண்டலம் அந்தார்டிக்காவை அடைந்திருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அவுஸ்திரேலிய தீ விபத்து தொடர்பான நாசாவின் செய்மதி தகவல்களை பயன்படுத்தி அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய முப்பரிமாண புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தினால் அவுஸ்திரேலியாவின் 10.3 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. அத்துடன் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் மில்லியன் கணக்கான விலங்குகளும் பலியாகியுள்ளது.

மேலும் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து நிர்க்கதியாகியுள்ளனர். இந் நிலையில் இந்த விபத்துக்களினால் உண்டான சேத விபரங்களை நிவர்த்தி செய்ய எதிர்வரும் 2 ஆண்டுகளுக்குள் 2 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் செலவாகும் என அந் நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13