இனவாதத்தை போஷித்துவரும் விஷப்பாம்புகளுடன் ஜனாதிபதி இணைந்துள்ளார் :  முஜிபுர் 

Published By: R. Kalaichelvan

08 Jan, 2020 | 12:56 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

ஜனாதிபதி இனவாதத்துக்கு எதிராக செயற்படுவதாக தெரிவிக்கின்றபோதும் அவர்  இணைந்திருப்பது இனவாதத்தை போஷித்துவரும் விஷப்பாம்புகளுடனாகும். அதனால் அந்த விஷப்பாம்புகள் எந்த நேரம் அவருக்கு எதிராக செயற்படும் என தெரிவிக்கமுடியாது. ஏனெனில் அவர் உருவாக்கி இருக்கும் இனவாத கூட்டணியை மீண்டும் நல்லவழிக்கு திருப்புவது இலகுவான விடயமல்ல என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவிதார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சியினால் கொண்டுவந்த ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி இனவாதத்தை எதிர்ப்பதாக தெரிவிக்கின்றபோதும் அவருடன் இருக்கும் ஒரு சிலர் அதனை போஷித்துவரக்கூடியவர்களாகும்.

ஏப்ரல் குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற பினனர் அதனை பயன்படுத்திக்கொண்டு தேர்தல் மேடைதோறும் இனவாதத்தை தூண்டியே தேர்தல் பிரசாங்களில் அவர்கள் ஈடுபட்டுவந்தனர். இனங்களுக்கிடையில் வைராக்கியத்தை ஏற்படுத்தியவர்களும். குரோதத்தை வளர்த்துவந்தவர்களும் இன்று ஜனாதபதியுடனே இருக்கின்றனர். இந்த சகத்திகள் ஒன்றிணைந்தே கோத்தாபய ராஜபக்ஷ்வை வெற்றிபெறச்செய்தார்கள். 

அன்று பண்டாரநாயக்கவும் இவ்வாறு செயற்பட்டே 1956இல் வெற்றிபெற்றார். இதனால் இறுதியில் அவர் இனவாத மதவாத முன்னணிகளுடன் கூட்டிணைந்து செயற்பட்டதால் தனது  உயிரையும் இல்லாமலாக்கிக்கொண்டார். அதனால் அரசியல் வரலாற்றில் பண்டாரநாயக்கவின் பயணத்தை சற்று பார்க்கவேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு நினைவுபடுத்த விரும்புகின்ன்றேன். 

ஜனாதிபதி இன்று இணைந்திருப்பது இவ்வாறான விஷப்பாம்புகளுடனாகும். அவர்களுடன் இணைந்தே பயணிக்கின்றார்.

அதனால் அந்த விஷப்பாம்புகள் எந்த நேரம் அவருக்கு எதிராக செயற்படும் என தெரிவிக்கமுடியாது. ஏனெனில் அவர் உருவாக்கி இருக்கும் இனவாத கூட்டணியை மீண்டும் நல்லவழிக்கு திருப்புவது இலகுவான விடயமல்ல. தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் எதனையும் பேசலாம். 

ஆனால் தேர்தலை வெற்றிகொள்ள அடிப்படையாக கடைப்பிடித்தது, இனவாதத்தையும் மதவாத்தையும் என்பதை மறந்துவிடவேண்டாம். அதனால் அந்த வெற்றியின் பெறுபேறு மிகவும் பயங்ரமானதாகும். அதனால் ஜனாதிபதி தனது பயணத்தை மாற்றிக்கொள்ள முயற்சிக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56