அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட ஹிலாரி கிளின்டன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், பிரதான கட்சிகளான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.
இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் மனைவியும், அமெரிக்க முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சருமான ஹிலாரி கிளின்டன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட 2383 வாக்குகளை பெறவேண்டும் என்ற நிலையில், தேவையான வாக்குகளை பெற்றதால் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM